Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : லைட் பாக்ஸ் மீடியா – கீதா ஆர்ட்ஸ் – ஸ்வப்னா சினிமா

நடிகர்கள் : துல்கர் சல்மான், சாத்வீகா வீரவல்லி, சுருதிஹாசன், சின்னி ஜெயந்த், நாசர், ருஹானி சர்மா மற்றும் பலர்.

இயக்கம் : பவன் சதினேனி

மதிப்பீடு : 3 / 5

பான் இந்திய அளவில் பிரபலமான மலையாள நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் கதை தெரிவு என்பது எப்போதும் வித்தியாசமானதாகவே இருக்கும். அதிலும் அவர் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதையில் தன்னை அழுத்தமாக பொருத்திக் கொள்ளும் வகையில் கதாபாத்திரத்தை தெரிவு செய்வதில் கில்லாடி என்பதை அனைவரும் அறிவோம். அத்தகைய மேஜிக்கை மீண்டும் ஒருமுறை தெலுங்கில் நேரடியாக தயாராகி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ படத்தில் அவர் நிகழ்த்தி இருக்கிறாரா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

அடிப்படை வசதிகள் அதிகம் இல்லாத கிராமப் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் தந்தைக்குத் தெரியாமல் தாயின் உதவியுடன் கல்வி கற்கிறார் கல்பனா (  சாத்வீகா வீரவல்லி) ஒருமுறை பாடசாலையில் கல்வி ஆர்வலரான பாஸ்கர் ( நாசர்)  என்பவர் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு பிரத்யேக திரையிடலை காட்சிப்படுத்துகிறார். அதை பார்க்கும் கல்பனாவிற்கு விண்வெளி விஞ்ஞானியாகி, ஆகாயத்தில் பறந்திட வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. அத்துடன் கல்பனாவிற்கு அந்த ஆர்வலர் விண்வெளி விஞ்ஞானியான மறைந்த கல்பனா சாவ்லாவின் புகைப்படத்தை பரிசாக வழங்க… கல்பனாவிற்கு ஆர்வம் அதிகமாகிறது.

ஆனால் அவளது தந்தையோ ‘ஓ’ லெவலுடன் பாடசாலைக்கு செல்வதை நிறுத்தி, கிருஷ்ணா( துல்கர் சல்மான்) என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

கல்பனாவின் வயதை பற்றி கூட தெரிந்து கொள்ளாத கிருஷ்ணா-  அவளை திருமணம் செய்து கொண்ட பிறகு தனது மனைவி கல்பனாவின் கனவை புரிந்து கொள்கிறான். அதனைத் தொடர்ந்து கல்பனாவை ‘ஏ’ லெவல்- உயர்கல்வி- விண்வெளி சார்ந்த பிரத்யேக கல்வி- ஆகியவற்றை கற்க வைத்து.. அவரது கனவிற்கு பக்கபலமாக இருக்கிறார்.

கல்பனாவின் கனவை நனவாக்க கிருஷ்ணா எதிர்கொண்ட சவால்கள் என்ன…? கல்பனா தன் கனவை எட்டிப் பிடிக்க எம்மாதிரியான சவால்களை எதிர்கொண்டார்? திருமணமான கல்பனாவின் கனவு கனவாகவே மாறியதா? அல்லது சாத்தியமானதா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

மிகப்பெரிய எளிதில் சாத்தியமற்ற கனவுடன் இருக்கும் கதையின் நாயகி… அதனை தடை செய்வதற்கான சூழல்கள்- உறவுகள் – நெருக்கடிகள்-  அழுத்தங்கள்- இவை அனைத்தையும் உடைத்து, கடந்து வர உதவும் கதையின் நாயகன் என பார்வையாளர்களுக்கு அறிமுகமான திரை பயணமாக இருந்தாலும்.. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநர் ரசிகர்களின் மனதில் ஊடுருவிக் கொண்டே செல்கிறார். அதிலும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு ….’ கிரேட்.

கதை நாயகியின் கனவு விண்வெளி சம்பந்தப்பட்டது என்பதால்… அது தொடர்பான திரை மொழி- தொழில்நுட்பத் தரம் – கடை கோடி பார்வையாளர்களையும் வியக்க வைக்கிறது. 

திரைக்கதை முதல் பாதியிலும் இரண்டாவது பாதியிலும் மெதுவாகவே பயணித்தாலும்… அழுத்தமாக நகர்வதால், ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கி கதையின் நாயகியுடன் பயணிக்க தொடங்கி விடுகிறார்கள்.

ரொக்கட் அறிவியல் தொடர்பான கதை என்பதால் அது தொடர்பான விவரண காட்சிகள்.. ஒரு பிரிவு ரசிகர்களுக்கு தொய்வை வழங்கினாலும் சொல்லப்பட்டிருக்கும் விடயம் புதிது என்பதால் ஆர்வம் அதிகரிக்கவே செய்கிறது.

உரையாடல் பல இடங்களில் தனித்துவமான கவனத்தை ஈர்க்கிறது.

இரண்டாம் பாதியில் விண்வெளி விஞ்ஞானியான ரோகிணி ( ஸ்ருதிஹாசன்) கதாபாத்திரத்தின் அறிமுகமும், அவரது வாழ்வியல் முறையும் திரைக்கதைக்கு கூடுதல் நம்பகத் தன்மையை உண்டாக்குகிறது. அத்துடன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சுருதிஹாசனையும் ரசிக்க முடிகிறது.

பாஸ்கர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நாசரின் திரை தோற்றம் சிறப்பு என்றாலும்… யாரும் எதிர்பார்க்காத வகையில் உச்சகட்ட காட்சியில் அவர் தோன்றுவது திரைக்கதைக்கு வலிமை சேர்க்கிறது.

கல்பனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை சாத்வீகா வீரவல்லி அபாரமான திறமையுடன் கூடிய கலைஞர் என்பதை அறிமுகமான படத்திலிருந்து நிரூபித்திருக்கிறார். இவருக்கு இந்திய சினிமாவில் மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய யதார்த்தமான – அழுத்தமான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை வழக்கம் போல் ஈர்க்கிறார்.

அதிலும் குறிப்பாக தன் மனைவியின் லட்சியம் குறித்தும் கனவு குறித்தும் எதிர்மறையான விமர்சனத்தை முன் வைக்கும் தன் சகோதரியை.. மனதளவில் மாற்றுவதற்காக அமையும் அவரின் பேச்சு மற்றும் உடல் மொழி சிறந்த நடிகர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு- ஜீ. வி.  பிரகாஷ் குமாரின் பின்னணி இசை – படத்தொகுப்பு – தொழில்நுட்பத்தரம் – என அனைத்தும் இயக்குநருக்கு பக்கபலமாக முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறது.

ஒரு பெண்ணின் கனவு ஆணாதிக்கம் கொண்ட இந்திய சமூகத்தில் சாத்தியப்பட வேண்டும் என்றால்… அதற்கு அந்தப் பெண்ணிற்கு கிடைக்கும் கணவர் என்ற உறவின் மூலம் சாத்தியமாகலாம் என்ற அறிவுரையுடன் கூடிய நடைமுறை எதார்த்தத்தை.. இந்த ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ விவரித்திருப்பதால்… எந்தவித தடையும் சொல்லாமல் இதனை ஏற்றுக் கொள்ளலாம். 

ஆகாயத்தில் ஒரு தாரகை – சாதித்த காரிகை

Previous Post

இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ யாழ்ப்பாணத்தில் நிறைவு

Next Post

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026
இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ யாழ்ப்பாணத்தில் நிறைவு

இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ யாழ்ப்பாணத்தில் நிறைவு

November 22, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

அனுமதியின்றி ஐந்து பலா மரங்களை வெட்டிய வெளிநாட்டவர் வெலிகமவில் கைது

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures