Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடபகுதி மக்களின் காணி உரிமையை மீட்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும்

December 9, 2020
in News, Politics, World
0

வடபகுதி மக்களின் காணி உரிமையுயையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என்று வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பும், பிராஜா அபிலாஷ வலையமைப்பும் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்து வவுனியாவில் இன்று முன்னெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடபகுதி மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் காரணமாக இடப்பெயர்வு, பாதுகாப்பு மற்றும் யுத்த சூழ்நிலையால் ஏற்பட்ட காரணங்களினால் தமது காணிகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இது வரைக்கும் யுத்த கால சூழலில் காணிகளை இழந்த மக்களின் காணிகளை அரசாங்கமோ, பாதுகாப்பு தரப்போ முழுமையாக விடுவிக்க எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

மக்கள் தமது நிலங்களை மீட்டு எடுப்பதற்காக பல்வேறுபட்ட கோரிக்கைளை முன்வைத்து கடந்த 10 வருடங்களாக போராடி வருகின்ற நிலையில் மக்களின் போராட்டத்தையோ ,கோரிக்கைகளையோ கண்டு கொள்ளாமலும் செவிமடுக்காமலும் உள்ள இச்சூழ்நிலையில் மக்கள் மனந்தளராமல் விடாமுயற்சியுடன் தமது காணி உரிமை போராட்டங்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறனர்.

இந்நிலையில் அரசாங்கம் வடபகுதியில் ஏற்கனவே ஆக்கிரமித்த காணிகளை விடுவிக்காமல் உள்ள நிலையில் மேலும் காணிகளை அபகரிக்கும் சூழ்ச்சியான திட்டங்களை முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், மாகாவலி அபிவிருத்தி திணைக்களம், வன இலாகா திணைக்களம்.போன்றவற்றின் ஊடாக வடபகுதி மக்களின் காணிகள் வாழ்விடங்கள் நன்கு திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றது. அந்த வகையில் கடந்த 1990 ஆண்டு யுத்தம் காரணமாக வலிவடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் சொந்த நிலங்கள் இன்னும் 3319 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படாமல் உள்ளது.

மேற்குறித்த திணைக்களங்களின் மூலம் வடபகுதி காணிகளை அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் சட்ட்டபூர்வமாக ஆக்கிரமித்து வருகின்றது. அந்த வகையில் முல்லைத்தீவில், முள்ளியவளையில், நித்தகை குளம் ஆகிய பகுதியில் 850 ஏக்கர் நிலமும், குறுந்தூர் குளம் 125 ஏக்கர் வயல் நிலமும், குமுளமுனை குளத்து வெளியில் 22 ஏக்கர் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அத்துடன் கொக்குத் தொடுவாயில் 100 ஏக்கர் வயல் காணி இதனால் 44 பேர் பாதிக்கப்படுகின்றனர்.

இது எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இத் திட்டத்தை பயன்படுத்தி சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான தோன்றுகின்றது. இதய பூமியான எமது வட பகுதி நிலங்களை இழப்பதுடன் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் இழக்க நேரிடும், எனவே. வடபகுதி மக்களின் நிலங்களை விடுவித்து அரசாங்கத்தின் எதிர்கால கபட நோக்கத்தை தோற்கடித்து வடபகுதி மக்களின் அரசியல்  பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள், கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஊடக சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இன்பம், மற்றும் அதன் வவுனியா முக்கியஸ்தர் தேவகிருஸ்ணன், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

14ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் இதை செயற்படுத்துங்கள் – பிரதமர்

Next Post

பிரபல நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

Next Post

பிரபல நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures