Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Health

மலர் மருத்துவம் உடலில் என்ன மாற்றங்களை உண்டாக்கும்?

June 10, 2021
in Health, News
0

உடல் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான மனநலமும் அவசியம். இதன் அடிப்படையில்தான், ‘மலர் மருத்துவம்’ உருவானது. அது என்ன மலர் மருத்துவம்?, எதற்காக பயன்படுகிறது?, எத்தகைய மாற்றங்களை இது உண்டாக்கும்? என்று பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான மனநலமும் அவசியம். இதன் அடிப்படையில்தான், ‘மலர் மருத்துவம்’ உருவானது. அது என்ன மலர் மருத்துவம்?, எதற்காக பயன்படுகிறது?, எத்தகைய மாற்றங்களை இது உண்டாக்கும்? போன்ற பல கேள்விகளுக்கு, சென்னையை சேர்ந்த மலர் மருத்துவ ஆலோசகரான கற்பக ஆனந்தி யூ-டியூப்பில் பதில் அளித்து வருகிறார். நெட்டிசன்களுக்கு மலர் மருத்துவம் பற்றிய புரிதலை ஏற்படுத்தி வரும் அவரிடம், அதுபற்றி விளக்கமாக பேசினோம். பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

* உடல்நலனிற்கும், மனநலனிற்கும், மலர்களுக்கும் என்ன சம்பந்தம்?

நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தையும் கெடுத்துவிடும். உதாரணத்திற்கு… தொடர் தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படலாம். ஆனால் அதற்கு மன உளைச்சலும் ஒரு காரணமாக அமையலாம். தலைவலி மாத்திரைகள் இதற்கு தற்காலிக தீர்வை தந்தாலும், மனநல ஆரோக்கியம் மட்டுமே நிரந்தர தீர்வை தரும். அத்தகைய மனரீதியான, நிரந்தர தீர்வுகளைதான் மலர் மருத்துவம் தருகிறது.

* மலர்கள் எப்படி மனநலனை மாற்றுகின்றன?

மனிதனுக்கு, 38 வகையான உணர்வுகள் உண்டு. பயம், கோபம், பதற்றம், தனிமை உணர்வு, அதீத சிந்தனை, தோல்வி மனப்பான்மை, கவலை… இப்படி மனித உணர்வுகள் நீண்டு கொண்டே இருக்கும். இவற்றின் தாக்கமாகவே உடலும், உள்ளமும் செயல்படுகிறது. மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஆக்ரோஷமாக இருப்பதற்கும் இவையே முக்கிய காரணமாகின்றன. இத்தகைய 38 உணர்வுகளையும் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை, சில மலர்களுக்கு உண்டு. இதைதான், இங்கிலாந்து மருத்துவர் எட்வர்ட் ஆராய்ந்து, அறிக்கையாக கொடுத்திருக்கிறார்.

* மனநலனில் மாற்றம் ஏற்பட்டால், உடல்நலனில் மாற்றம் ஏற்படுமா?

நிச்சயமாக…! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பயம், கோபம், பதற்றம்… போன்ற மன உணர்வுகள் ஆட்கொண்டு அவர்களது செயல்பாட்டில் தடையை ஏற்படுத்திவிடுகிறது. இவை, மனிதர்களின் மனநலனை மட்டுமின்றி, உடல்நலனையும் பாதிக்கக்கூடும்.

* மலர்கள் எப்படி மருந்தாகின்றன?

சில நோய்களுக்கு பூக்களை நுகர்வதும், சிலவற்றுக்கு பூக்களை தொட்டு உணர்வதுமே மருந்தாகிறது. மற்ற சில நோய்களுக்கு மலர் மூலிகைகளை உட்கொள்வது தீர்வாகிறது. பூக்களில் இருக்கும் மூலிகைகள்தான், மலர் மருத்துவத்தின் முக்கிய மருந்துகள்.

* என்னென்ன நோய்களுக்கு மலர்கள் மருந்தாகுகின்றன?

ராக் ரோஸ், இம்பேடென்ஸ், கிளிமாடிஸ், ஸ்டார் ஆப் பெத்லெஹம் மற்றும் செர்ரி பிளம் போன்ற மலர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை போன்றவற்றைப் போக்கி உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் ஏற்படுத்தும். அதே போல் மன உளைச்சல் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு அக்ரிமனி என்ற தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து நல்ல பலனை தரும். அதே போல் நல்ல உறக்கம், ரத்த சுத்திகரிப்பு, சகிப்புத்தன்மை… என அனைத்து மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மலர் மருத்துவம் நல்ல பலனை அளிக்கும். ஒவ்வொரு பிரச்சினைக்கும், ஒரு மருந்துள்ளது. நம்முடைய பிரச்சினை என்னவோ அதற்கான மருந்துகளை தகுந்த ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இந்தியாவிலும், தமிழகத்திலும் மலர் மருத்துவத்தின் புரிதல் எந்தளவிற்கு இருக்கிறது?

நான் 15 வருடங்களுக்கு முன்பே மலர் மருத்துவத்தில் டிப்ளமோ முடித்துவிட்டு, அதில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ஒருசில மலர் மருத்துவத்தை, அனுபவப் பூர்வமாகவும் உணர்ந்திருக்கிறேன். ஆகவே, இந்தியாவிலும், தமிழகத்திலும் பல வருடங்களாக மலர் மருத்துவம் இலை மறை காயாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் பெரியளவில் பிரபலமாகவில்லை. சமீபகாலமாக யூ-டியூப் மூலமாக பிரபலமாகி இருக்கிறது.

 http://Facebook page / easy 24 news
Previous Post

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது விஷால் காவல் நிலையத்தில் புகார்

Next Post

வீட்டிலேயே செய்யலாம் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ்

Next Post

வீட்டிலேயே செய்யலாம் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures