Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்

August 3, 2020
in News, Politics, World
0

பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களப்பு தினம் எதிர்வரும் 05 ஆந்திகதி நடைபெறவிருக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமான தேர்தலினை நடாத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தேர்தல் நடாத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேன கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத்தேர்தலினை சுமுகமாக நடாத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள 428 வாக்குச் சாவடிகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 57 நடமாடும் பொலிஸ் பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக விசேடமாக இரண்டு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டு பொலிஸ் காவலரன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான போக்குவரத்து மாற்றுப் பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வீதித்தடை ஒழுங்குகள் மற்றும் லைட் சமிக்ஞைகள் என்பன பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான மின்விளக்கு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து பாது காப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பிற்காக வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்வதற்கும், வாக்களிப்பின் பின்னர் வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டுவருவதற்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மற்றும் தேர்தலுக்குப் பின்னர் வன்செயல்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பிரதேசங்கள் மற்றும் பிரமுகர்களின் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக வீதித் தடைகள், நடமாடும் பொலிஸ் பிரிவுகள், மோட்டார் சைக்கிள் நடமாடும் பிரிவுகள் என்பன ஏற்படுத்தப்பட்டடுள்ளது.

இதுதவிர தேர்தல் சட்டவிதிகளுக்கமைவாக சட்டவிரோத கட்டவுட்கள், பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளும், அதற்கான பணியாட்களும் தயார்நிலையில் உள்ளதுடன் வாக்களிப்பு நிலையத்திற்கு அன்மித்த 500 மீற்றர் சுற்றுப்புறத்தில் இவ்வாறான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேன கருத்து தெரிவித்தார்.

இவ்விசேட கூட்டத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன், மட்டக்களப்புக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மென்டிஸ், விசேட பாதுகாப்பு கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான சாமிக பிரேமஸ்ரீ, ஏ.எம்.எம். நவாஸ் மற்றும் தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post

சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் தேர்தல் பிரச்சாரங்கள்

Next Post

200ஆவது தர்ம உபதேசம் இன்று நடைபெற்றது

Next Post

200ஆவது தர்ம உபதேசம் இன்று நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures