Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி மோதல்

June 11, 2021
in News, Sports
0

பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின்  அனஸ்டேஷியா பவ்லியுசென்கோவாவை செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா எதிர்கொள்ளவுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின்  முதலாவது அரையிறுதிப் போட்டியில்  கிரேக்கத்தின் மரியா சக்கரியாவும் செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவாவும் பங்கேற்றனர்.

கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்துடைய  டென்னிஸ் போட்டியொன்றின் அரையிறுதியில் இருவரும் முதன்முறையாக முன்னேறியிருந்த நிலையில், வெற்றியை ஈட்டிக்கொண்டு இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? என்பதில் பலத்த எதிர்பார்ப்பு டென்னிஸ் இரசிகர்கள் பலரினதும் கேள்வியாக இருந்தது.

இப்போட்டியின் முதல் செட்டை கடும் போராட்டத்துக்குப் பின்னர்  7 க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் பார்பொரா கிரெஜ்சிகோவா கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த கிரேக்கத்தின் மரியா சக்கரியா 6க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

இதைனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும்  மூன்றாவதும் கடைசியுமான  செட்டில் இருவரும் சரமாரியாக மோதிக்கொண்டனர். டை பிரேக்கர்  (சமநிலை முறிப்பு)  சென்ற இந்த செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்றபோதிலும், இறுதியில் 9க்கு 7 என்ற செட் கணக்கில்  செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் நபராக முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின்  அனஸ்டேஷியா பவ்லியுசென்கோவாவும் ஸ்லோவெனியாவின் தமாரா சிடான்செக் இருவரும் மோதிக்கொண்டனர். இப்போட்டியில் 7க்கு5, 6க்கு 3 என்ற  புள்ளிகள் கணக்கில் முதலிரண்டு நேர் செட்களிலும் ரஷ்யாவின்  அனஸ்டேஷியா வென்று இலகுவாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முன்னனி டென்னிஸ் நட்சத்திரங்கள் தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில், கடந்த முறையைப் போலவே இம்முறையும் சம்பியன் பட்டத்தை புதுமுக வீராங்கனையொருவர் கைப்பற்றும் என்பது உறுதி.  மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி நாளை சனிக்கிழமை (12) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

எத்தியோப்பியாவில் மக்களை வாட்டும் பஞ்சம் – ஐ.நா.

Next Post

குழந்தை பாக்கியம் அருளும் சந்தானலட்சுமி

Next Post

குழந்தை பாக்கியம் அருளும் சந்தானலட்சுமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures