Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றார் ரவிசாஸ்திரி

November 9, 2021
in News, Sports
0
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் ரவிசாஸ்திரி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிசாஸ்திரி 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பு ஏற்றார். 2019-ம் ஆண்டில் அவரது பதவி காலம் மேலும் 2 ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியுடனான அவரது 4 ஆண்டு கால பயிற்சி பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நமிபியாவுக்கு எதிரான ஆட்டமே அவரது பயிற்சியின் கீழ் இந்தியா விளையாடிய கடைசி போட்டியாகும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு வருகிற 17-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து தனது பணியை தொடங்குகிறார்.

59 வயதான ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி எந்த ஐ.சி.சி. கோப்பையையும் வெல்லவில்லை. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியோடு வெளியேறியது. இந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியை கூட எட்டவில்லை.

அதே சமயம் அவரது பயிற்சியின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மகத்தான எழுச்சி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இதுவரை எந்த ஆசிய அணியும் செய்யாத வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியது. 42 மாதங்கள் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா ‘நம்பர் ஒன்’ அரியணையை வகித்தது. அவரது பயிற்சியில் இந்திய அணி 43 டெஸ்டில் விளையாடி 25-ல் வெற்றியும், 76 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 51-ல் வெற்றியும் பெற்றது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் அடுத்து அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அம்மா உணவகத்தில் இலவச உணவு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Next Post

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

Next Post
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சீ ஹோக்ஸ் அணியை 2 – 1 என வீழ்த்தியது கலம்போ எவ்சி

சீ ஹோக்ஸ் அணியை 2 – 1 என வீழ்த்தியது கலம்போ எவ்சி

October 15, 2026
2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கிய பயணம்: ருமேஷ் தரங்கவின் ‘ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளி’ சிஐசி ஹோல்டிங்ஸ்

2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கிய பயணம்: ருமேஷ் தரங்கவின் ‘ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளி’ சிஐசி ஹோல்டிங்ஸ்

October 15, 2026
பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது

பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது

October 15, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் | நவநீதம் நவி பிள்ளை

October 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures