Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடாளுமன்றை கூட்டும் தேவை நாட்டில் ஏற்படவில்லை

April 29, 2020
in News, Politics, World
0

அரசமைப்புக்கு இணங்க, கலைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றை கூட்டும் தேவை நாட்டில் ஏற்படவில்லை என முன்னாள்இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்க்கட்சியை சேர்ந்த சிலகட்சித் தலைவர்கள், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் ஊடாக நாடாளுமன்றை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தியிருந்தனர்.

இதில் அரசமைப்பின் 70 ஆவதுஉறுப்புரிமையின் 7 ஆவது சரத்துக்கு இணங்க, கலைக்கப்பட்ட நாடாளுமன்றமொன்றை மீண்டும்கூட்டும் அதிகாரம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

ஆனால், அந்தச் சரத்துக்கு அமைய ஜனாதிபதியாக நாடாளுமன்றை கூட்ட வேண்டும் என்றால், 155 ஆவது உறுப்புரிமையின் 2ஆவது சரத்துக்கமைய, பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், விசேட சட்டமொன்று தற்போது கொண்டு வரப்படவில்லை.

நாட்டில் தற்போது அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்படவும் இல்லை. அத்தோடு, யுத்த காலத்தின்போது கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீண்டும் கூட்டுவதற்குத்தான் அவசரகாலச்சட்டத்தை அமுல் படுத்தப்படவேண்டும்.

தற்போதுள்ள ஊரங்குச்சட்டமும், சுகாதார தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, 70 ஆவது உறுப்புரிமையின் 7 ஆவது சரத்தை இவ்விடயத்தில் சுட்டிக்காட்ட முடியாது.

155 ஆவது உறுப்புரிமையின் 3 ஆவதுசரத்துக்கமைய, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு அரச சேவைகளை நிர்வகிக்க நிதி ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சிலர், அரசமைப்பு தொடர்பாக போதிய தெளிவில்லாத காரணத்தினால் பல்வேறு கருத்துக்களைக் கூறிவருகிறார்கள். நாம் அரசமைப்புக்கு இணங்கவே இந்தவிடயத்தில் செயற்பட முடியும். எனவே, யாரும் இதில் குழப்பமடையத் தேவையில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

படை முகாம்களையும் ஆய்வு செய்து முகாம்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணி

Next Post

சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 871 மில்லியன்

Next Post

சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 871 மில்லியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures