Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நஞ்சுண்ட வீரம்: தீபச்செல்வன்

November 24, 2021
in News, கவிதைகள்
0
நஞ்சுண்ட வீரம்: தீபச்செல்வன்

ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில்
சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில்
நஞ்சை ஆயுதமாக்க
உயிரை வேலியாகினர் போராளிகள்

வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை
அலங்கரிக்கும் கனவு வீரர்களின்
கருணையான முகத்தை
அன்புறைந்த வார்த்தைகளை
சனங்களுக்காய் களமாடும் வீரத்தை
கடக்க முடியா நஞ்சு

தன்னலமற்று நஞ்சருந்திய போராளிகளின்
கனவுகளால் பச்சை நிறமானது நிலம்.

பொறிக்குள் எல்லா வகையான
தந்திரங்களையும் முறியடிக்க
நெடுநேரம் போராடினர்
சூழ்ச்சியால் அபாயமாக்கப்பட்ட
நஞ்சு வலயத்தில்
காற்றுக்குத் தவித்தனர் குழந்தைகள்

மரணத்தின் நிழல் வீசியது எங்கும்

பறவைகள் முட்களுக்குள் மாட்டுண்டதுபோல்
குழந்தைகள் கிடங்குகளில் விழுந்தது போல்
குட்டிமான்கள் பொறிக்குள் சிக்குண்டதுபோல்
நஞ்சுப் பொறியில் அகப்பட்டது நிலம்

உயிர்கள் எரிய
காடு துடித்தது.

கனவு நிரம்பிய விழிகளோடிருந்த குழந்தைகளுக்கு
நஞ்சை பருக்கையில்
அதை தாமருந்தினர் போராளிகள்

கனவு மிகுந்த புன்னகையில்
இலட்சியம் நிறைந்த பார்வையில்
விடுதலையின் பேராவாவில்
வளர்த்தெடுக்கப்பட்ட வீரத்தில்
சூழ்ச்சியால் வீசப்பட்ட நஞ்சு
நனைத்தது உடலை மாத்திரமே
0

தீபச்செல்வன்

Previous Post

சந்தானம் கலக்கிய ‘சபாபதி’ | திரைவிமர்சனம்

Next Post

பேயாக களமிறங்கியிருக்கும் சோனியா அகர்வால்

Next Post
பேயாக களமிறங்கியிருக்கும் சோனியா அகர்வால்

பேயாக களமிறங்கியிருக்கும் சோனியா அகர்வால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

October 17, 2026
மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல விலகல்

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல விலகல்

October 17, 2026
மின்சாரக் கட்டண உயர்வு குறித்து வெளியான தகவல்!

மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்பு வதந்தி மறுப்பு: மின் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பும் என தகவல்

October 17, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

திடீர் மின்வெட்டு காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தடை: நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள்!

October 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures