Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சந்தானம் கலக்கிய ‘சபாபதி’ | திரைவிமர்சனம்

November 24, 2021
in Cinema, News
0
சந்தானம் கலக்கிய ‘சபாபதி’ | திரைவிமர்சனம்
நடிகர் சந்தானம்
நடிகை பிரீத்தி வர்மா
இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ்
இசை சாம் சி.எஸ்.
ஓளிப்பதிவு பாஸ்கர் ஆறுமுகம்
பிறப்பிலிருந்து பேச்சு சரியாக வராமல், திக்கி திக்கி பேசுகிறார் சந்தானம். இவருடைய அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அரசு வேலையில் பணிபுரிகிறார். தான் ஓய்வு பெற வேண்டிய நிலை வருவதால் தன்னுடைய மகனை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். பல வேலைகளுக்கு செல்லும் சந்தானத்திற்கு அங்கு நிறைய அவமானங்கள் ஏற்படுகிறது. இதனால் விரக்தி அடையும் சந்தானம், கோபத்தில் ஒருநாள் குடித்து விட்டு வீட்டில் கலவரம் செய்கிறார்.
விமர்சனம்
போதையில் இருக்கும் சந்தானத்திற்கு தெரியாமலேயே ஒரு மிகப்பெரிய விஷயம் நடக்கிறது. இதன் மூலம் விதி விளையாடுகிறது. பின் சந்தானம் விதியின் கையில் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் விதியின் விளையாட்டில் சந்தானம் எப்படி எல்லாம் விளையாடுகிறார்? எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை. வழக்கம் போல் படத்தில் சந்தானம் தன்னுடைய கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திக்கி திக்கி பேச மிகவும் சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. நாயகி பிரீத்தி வர்மாவுக்கு அதிகம் வேலையில்லை. படத்தில் சந்தானத்திற்கு பிறகு எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு பாராட்டக்குரிய வகையில் இருக்கிறது. தந்தைக்குரிய பொறுப்புடன் நடித்து கைத்தட்டல் வாங்குகிறார். சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார் புகழ். இவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
விமர்சனம்
ஒருவர் வாழ்க்கையில் விதி விளையாடுவதை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ். கதைக்களத்தை சிறப்பாக சரியான முறையிலும் கொண்டு சென்றிருக்கிறார். படத்தில் நகைச்சுவை மட்டுமில்லாமல் சில கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். படத்தில் டைமிங் பஞ்ச்சும், நகைச்சுவையும் படத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு. சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு அருமை. மொத்தத்தில் ‘சபாபதி’ சபாஷ் போடலாம்.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் கொலை – சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

Next Post

நஞ்சுண்ட வீரம்: தீபச்செல்வன்

Next Post
நஞ்சுண்ட வீரம்: தீபச்செல்வன்

நஞ்சுண்ட வீரம்: தீபச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

October 17, 2026
மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல விலகல்

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல விலகல்

October 17, 2026
மின்சாரக் கட்டண உயர்வு குறித்து வெளியான தகவல்!

மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்பு வதந்தி மறுப்பு: மின் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பும் என தகவல்

October 17, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

திடீர் மின்வெட்டு காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தடை: நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள்!

October 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures