Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியில் இருந்து முன்னாள் எம். பி. ஜெயானந்த மூர்த்தி விலக்கப்பட்டுள்ளதாக -கருணா அம்மான்

June 4, 2020
in News, Politics, World
0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியான எமது கட்சியிலிருந்து விலக்கி நீண்டகாலமாகின்றது. ஆனால் அவர் கட்சியில் தான் போட்டியிடுவதாக மக்கள் மத்தியிலே பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு அவர்களை ஏமாற்ற முற்படுகின்றார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்

நேற்று மட்டக்களப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆராயப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தையல் மெசின் சின்னத்திலே இம்முறை தேர்தலில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடுகின்றதுடன் வடக்கு கிழக்கிலே யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய இடங்களில் எமது கட்சி புத்திஜீவிகள், முன்னாள் போராளிகளை இணைத்து இந்த தேர்தல் களத்திலே நாங்கள் இறங்கியிருக்கின்றோம்.

அதேவேளை நான் அம்பாறை மாவட்டத்திலே போட்டியிடுகின்றேன். அங்கு நான் வெற்றிபெறுவது உறுதியான முடிவு. அம்பாறை மாவட்ட மக்கள் அனைவரும் என்னுடன் கைகோர்த்து நிற்கின்றார்கள். அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது ஒரு ஆசனத்தையாவது மட்டக்களப்பு மக்கள் பெற்றுத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த 14 வருடங்களாக நிறைய வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செய்து கொடுத்திருக்கின்றேன். வேலைவாய்ப்புக்கள், குடிநீர் விநியோகங்கள், மின்சார விநியோகங்கள், நீர்ப்பாசனங்கள், குளங்கள், போக்குவரத்து வீதிகள், பாலங்கள் என பலதரப்பட்ட வேலைகளை நான் செய்திருக்கின்றேன்.

ஏனைய கட்சிகளிலே போட்டியிடுபவர்கள் அனைவரும் மண் கொள்ளைக்காரர்களும், வட்டிக்குக் கொடுப்பவர்களும், பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் . எனவே நாங்கள் தூய்மையானவர்களை உங்களுக்குத் தெரிவு செய்து தந்திருக்கின்றோம். ஆகவே நீங்கள் உணர்ந்து கொண்டு எங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே மேச்சல் தரை பிரச்சனை, களுதாவளை மக்கள் படுகின்ற துன்பம், பாரியளவில் விவசாயப் பொருட்களை அவர்கள் உற்பத்தி செய்தாலும், அதை சந்தைப் படுத்த முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அவ்வாறே கடந்த காலங்களிலே விடுபட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், யுவதிகள், பாதிக்கப்பட்ட போராளிகள், என்றெல்லாம் பல பிரச்சனைகளை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆகவே இதற்கெல்லாம் ஒரு நிரந்தரத் தீர்வை நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட நாம் திட்டமிட்டிருக்கின்றோம்

கடந்த காலத்திலே பல அரசியல் கட்சிகள் இருந்தும். பல தவறுகளை நிகழ்த்தியிருக்கின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது போராட்டத்தை வைத்துதான் இவ்வளவு காலம் பிழைப்பு நடாத்தி வந்தார்கள். விடுதலைப்புலி போராளிகளை கேவலப்படுத்தும் வகையில் சுமந்திரன் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரைக்கூட நீக்கமுடியாத கட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு திணறிக் கொண்டிருக்கின்றது. ஆகவே இன்று அவர்கள் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று நாங்கள் போராளிகளை களம் இறக்கியிருக்கின்றோம். தளபதிகளாக இருந்தவர்களை களம் இறக்கியிருக்கின்றோம். ஆகவே போராட்டத்திலே பற்று வைத்திருப்பவர்களாக இருந்தால். நிச்சயமாக எங்கள் வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டுமென்பதை அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

முதலில் எங்கள் கட்சியிலிருந்து திருட்டுத்தனமாக ஓடிச்சென்ற ஜெயானந்த மூர்த்தி தற்பொழுது எங்கள் கட்சியில்தான் போட்டியிடுவதாக பொய்ப்பிரசாரங்களை மக்கள் மத்தியிலே செய்து வருகின்றார். அவரை நாங்கள் எமது கட்சியிலிருந்து விலக்கி நீண்டகாலமாகின்றது. எனவே அவரைப்போன்றவர்கள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றார்கள்.

இன்று எங்களுடைய கட்சி ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நெருக்கமான உறவைப் பேணுவதாக இருக்கின்றது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திதான் இன்று நாங்கள் தனித்துவமாக வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றோம்.

ஏனெனில் மொட்டுக் கட்சியில் போட்டியிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எமது தமிழ் மக்களின் உரிமைகளை, அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் நாங்கள் எங்கள் கட்சியிலே போட்டியிட்டு வென்று மத்தியிலே ஒரு கூட்டாட்சிக்கு ஆதரவு தருவோமென்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். என்றார்

Previous Post

க.பொ.த உயர்தர, புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் !

Next Post

யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு உணவு பொருட்கள் வழங்கல்

Next Post

யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு உணவு பொருட்கள் வழங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures