Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாஸா விவகாரம்; மீண்டும் இலங்கையிடம் வலியுறுத்தும் ஐ.நா

January 26, 2021
in News, Politics, World
0

கொரோனா தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை, கட்டாயம் தகனம் செய்யும் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுளின் நான்கு விசேட நிபுணர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு, இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானமானது, மனித உரிமை மீறலுக்கு நிகரான விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை புதைப்பதின் ஊடாக, கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக, மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியே, இலங்கை அரசாங்கம் சடலங்களை தகனம் செய்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது

எனினும், சடலங்களை புதைப்பதின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளதாக, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரை துன்புறுத்தும் நோக்கில், பாகுபாடு, அடக்குமுறை மற்றும் தேசியவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சடலங்கள் தகனம் செய்யப்பப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை மக்கள் மீது பிரயோகிக்கப்படும் வெறுப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Previous Post

நாட்டுக்கு வரவுள்ள 500,000 தடுப்பூசிகள்

Next Post

யாழ்ப்பாணம் வந்த லொறிகளின் பணியாளர்களுக்கு கொரோனா

Next Post

யாழ்ப்பாணம் வந்த லொறிகளின் பணியாளர்களுக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures