Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்தி சம்பந்தன், மாவைக்கு குலநாயகம் அவசர கடிதம்

May 19, 2020
in News, Politics, World
0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வழங்கிய செவ்வி தொடர்பில் முழுத்தமிழ் உலகமும் அதிக விரக்தி அடைந்துள்ளது. எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது கட்சிக்கு ஏற்படக்கூடிய பின்னடைவைத் தவிர்க்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மிகவும் அவசியமாகின்றது.

– இவ்வாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார் இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சூ.சேவியர் குலநாயகம்.

இலங்கை அரசியலில் தமிழினத்தின் சார்பாக முக்கிய வகிபாகம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, சுமந்திரனின் போக்குக்கு விட்டுக்கொண்டு போனால் கட்சி மட்டுமல்ல தமிழினமே தேய்ந்து போகும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியாக இயங்கிய காலப்பகுதியில் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு எதிராக கட்சியின் மத்திய செயற்குழுவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு செயற்பட்டமைக்கான முக்கிய காரணம், தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவர் தெரிவித்த விமர்சனங்களாகும். கட்சியின் தலைமைப்பதவி மாற்றத்துக்காகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமல் போனமைக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் எமது கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்றத் தேர்தல் அபேட்சகருமான எம்.ஏ.சுமந்தின் இம்மாதம் 08ஆம் திகதி அன்று சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார். அதில் தமிழினம் சார்பாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தையும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தியும், எமது கட்சி தமிழீழ விடுதலைப்புலிகள் விடயத்தில் பிழையான அனுகுமுறையைக் கொண்டிருந்தது என்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும் கூறியுள்ளார்.

ஆனந்தசங்கரி கொண்டிருந்த நிலைப்பாட்டை விடவும் மோசமான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் தமிழ்த் தேசியத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் சுமந்திரன் பெருந்துரோகம் விளைவித்துள்ளார் என்றே மக்கள் கருதுகின்றார்கள்.

தனிப்பட்ட கருத்துக்களை யாரும், எப்படியும் கொண்டிருக்க முடியும். ஆனால், ஒரு அரசியல் கட்சியில், அதுவும் இன விடுதலை, சுதந்திரத்தை நோக்காகக் கொண்டு செயற்படும், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து நின்றுகொண்டு கூட்டுப் பொறுப்பற்ற முறையில் சுமந்திரன் கருத்துக்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

அடிப்படையில் மாறுபாடான கொள்கைகள், கருத்துக்கள் இருக்குமானால் கட்சிக்கு வெளியே சென்று கூறவேண்டும். பாகிஸ்தான் நாடு பிரித்துக்கொடுக்கும் விடயத்தில் மகாத்மா காந்தியுடனும், இந்திய காங்கிரஸ் கட்சியுடனும் முரண்பட்ட மூதறியர் இராஜி கட்சியை விட்டு வெளியேறி மும்பையில் பகிரங்க கூட்டம் கூடி அதில் விளக்கமறித்தார். அது முறையானதும், அரசியல் நாகரிகமும் ஆகும்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரும் அவாவோடு எப்படியும் சொல்லலாம், செயற்படலாம் எனவும் கருத்தக்கூடாது.

இலங்கை அரசியலில் தமிழனத்தின் சார்பாக முக்கிய வகிபாகம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, சுமந்திரனின் போக்குக்கு விட்டுக்கொண்டு போனால் கட்சி மட்டுமல்ல தமிழினமே தேய்ந்து போகும்.

ஆனந்தசங்கரிக்கு எதிரான தீர்மானித்தை நான் பிரேரித்து அதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் ஆனந்தசங்கரியே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகத் தொடர்கின்றார். இதனாலேயே இலங்கை தமிழரசுக் கட்சி மீளெழுச்சி பெற்று இன்று உயர்ந்து நிற்கின்றது. ஆனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப்புலிகள் மீது கொண்டிருந்த கருத்துக்களை விடவும் சுமந்திரன் மோசமான கருத்துக்களையே தற்போது கூறியுள்ளார். தமிழினத்தின் சார்பாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தையும் ஆயுதப் போராட்ட காலப்பகுதியில் எமது கட்சி நடந்து கொண்ட அணுகுமுறை பற்றியும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

இவற்றைக் கருத்தில்கொண்டு சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகின்றேன். எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஏற்படக்கூடிய பின்னடைவைத் தவிர்க்கவும் சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை அவசியமாகின்றது. முழுத்தமிழ் உலகமும் சுமந்திரனின் செவ்வி தொடர்பில் அதிக விரக்தி அடைந்துள்ளது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் – என்றுள்ளது.

Previous Post

நடிப்புக்கு முழுக்கு, சார்மி அறிவிப்பு

Next Post

992 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

Next Post

992 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures