Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா வைரஸ் மருந்து முதல் சோதனையிலேயே தோல்வி

April 24, 2020
in News, Politics, World
0

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கிளினிக்கல் டெஸ்டில் வைத்து பரிசோதிக்கப்பட்ட remdesivir மருந்து முதல் பரிசோதனை முயற்சியில் தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் இல்லை.

மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு மருந்து கம்பெனிகள் இறங்கி உள்ளன. அந்த வகையில் பல்வேறு ஆய்வு பரிசோதனைள் காரணமாக கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக ரெமெடிவிர் மருந்தை சிகிச்சையளிக்க பயன்படுத்த முடியும் என்ற பரவலான நம்பிக்கை இருந்தது.

ஆனால் சீனாவில் நடத்தப்பட்ட கிளினிக்கல் சோதனை குறித்து உலக சுகாதார அமைப்பு தற்செயலாக வெளியிட்ட வரைவு ஆவணங்களின்படி, மருந்து வெற்றிகரமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்து நோயாளிகளின் நிலையை மேம்படுத்தவில்லை என்றும் இரத்த ஓட்டத்தில் நோய்க்கிருமிகளின் இருப்பைக் குறைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மருந்தை தயாரித்து வரும் அமெரிக்க நிறுவனமான கிலியட் சயின்சஸ், இந்த ஆவணம் ஆய்வை தவறாக சித்தரித்துள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் மருத்துவ பரிசோதனை தரவுத்தளத்தில் தற்செயலாக remdesivir மருந்தினை பயன்படுத்தி நடத்தப்பட் சோதகைள் குறித்த அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் remdesivir மருந்து தோல்வி அடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த செய்திகள் வேகமாக பரவிய நிலையில் , தோல்வியுற்ற சோதனை பற்றி வரைவு அறிக்கை தவறுதலாக பதிவேற்றப்பட்டதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியதுடன் அதனை உடனே நீக்கிவிட்டது.

இதற்கிடையே remdesivir மருந்தினை ஆராய்ச்சியாளர்கள் 237 நோயாளிகளுக்கு கொடுத்து ஆய்வு செய்திருக்கிறார்கள். மருந்து 158 பேருக்கு சரியாக வேலை செய்யவில்லை. 79 பேருக்கு முன்னேற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு, மருந்து உட்கொண்ட நோயாளிகளில் 13.9% பேர் இறந்துவிட்டனர். பக்க விளைவுகள் அதிகம் இருந்த காரணத்தால் இந்த சோதனை ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டது. “ரெம்டெசிவிர் மருத்துவ வைராலஜிக்கல் நன்மைகளுடன் தொடர்புபடுத்தப்படவில்லை” என்று உலக சுகாதார நிறுவனம் தற்செயலாக வெளியிட்ட வரைவு அறிக்கையில் சுருக்கமாக கூறப்பட்டிருந்தது இதனிடையே இந்த மருந்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய அமெரிக்க பங்குகள் 1% க்கும் அதிகமான அளவு சரிவை சந்தித்தன.

Previous Post

ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை

Next Post

நியூயார்க்கை கலங்க வைத்த கொரோனா அறிக்கை

Next Post

நியூயார்க்கை கலங்க வைத்த கொரோனா அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures