உலகத்தில் முதல் நாடாக,கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இன்றைய நிலையில் 1,80,20,684 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,13,30,141 பேர் குணமடைந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,88,913 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,64,318 ஆகவும், பலி எண்ணிக்கை 1,57,898 ஆக உயர்ந்து உள்ளது. இரண்டாம் இடத்தில் பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 27,08,876 ஆகவும், பலி எண்ணிக்கை 93,616 ஆக உயர்ந்து உள்ளது.
மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனாவால் மொத்தம் 17,50,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,403 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 54,735 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 853 பேர் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது .













