ரஜினிகாந்த் அரை அரசியல்வாதியாக இருக்கிறேன் என்று சொன்னதற்கே அவருடைய படங்களைப் பற்றியே அவரது ரசிகர்கள் மறந்துவிட்டார்கள். ரஜினி முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டால் அவருடைய படங்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள் போலிருக்கிறது.
திரையுலகத்தில் நடக்கும் ஸ்டிரைக் ஒரு புறம், ஐபிஎல் மறுபுறம், காவிரி பிரச்சினை இன்னொரு புறம் என தமிழ்நாடு மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஐபிஎல்லை மாற்றியாகிவிட்டது, திரையுலக ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது, காவிரி பிரச்சினையும் தீர்ந்துவிட்டால் தமிழக சினிமா ரசிகர்கள் சினிமா பக்கம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பார்கள்.
இந்த இடைவெளியில் ‘காலா’ படத்தின் டீசர் சத்தமில்லாமல் ஒரு சாதனையைக் கடந்தும், மற்றொரு சாதனையை நெருங்கியும் செல்கிறது. ‘காலா’ டீசரின் பார்வைகளின் எண்ணிக்கை ‘விவேகம்’ டீசரின் பார்வையைக் கடந்துவிட்டது. மேலும் 5 லட்சம் லைக்குகளை நெருங்கப் போகிறது.
காவிரி சத்தத்தில் காலா சத்தமும், ரஜினி ரசிகர்களுக்குக் கேட்கவில்லை.