சமீபத்தில் மோகன்லால் பழங்கால உடையணிந்து கெத்தாக ஒற்றைக்காலை தூக்கி ஒரு வெட்டப்பட்ட மரத்தின் மீது வைத்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.. இந்தப்படத்தை பகிர்ந்துள்ளவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இது அவர் இயக்கிவரும் ‘காயம்குளம் கொச்சுன்னி’ படத்தில் மோகன்லால் நடித்துள்ள கெட்டப் ஆகும்.
நிவின்பாலி கதாநாயகனாக நடித்தாலும் இதில் ‘இதிக்கரா பக்கி’ என்கிற முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். சுமார் நாற்பது நிமிடங்கள் மோகன்லால் வரும் காட்சிகள் படத்தில் இருக்கின்றதாம்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் இப்படி ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார் மோகன்லால்.