Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்முனையில் குழப்பத்தை யார் விளைவிக்கிறார்கள் ?; மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

June 10, 2020
in News, Politics, World
0

முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால் கல்முனை தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைப்பிரச்சினை நிலைமை தொடர்பாக கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (9) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் மக்களிடையே எந்தவித பிளவுகளும் இல்லை .

யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பதுபோல் தேர்தல் வரும்போதெல்லாம் கல்முனையில் தமிழ் முஸ்லிம் குழப்பத்தை ஏற்படுத்துவதை நாங்கள் வழமையாக கொண்டிருக்கின்றோம் .

முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் பார்க்கின்றபோது தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை அணைப்பதற்கு தண்ணீரை ஊற்றாமல் நெருப்பை ஊற்றி வளர்ந்தவர்களை தான் நாங்கள் கண்டு இருக்கின்றோம்.

அதேபோன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பை பார்த்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டிய இடத்தில் தீர்க்காமல் அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் நிலையை அவதானிக்க முடிந்தது.

அண்மையில் கூட மட்டக்களப்பு அம்பாரை எல்லை பிரச்சினை பெரிதாக பேசப்படுகின்றது அவை ஏன் இந்தத் தேர்தல் காலத்தில் மாத்திரம் பேசப்படுகின்றது என்பதனை இரண்டு சமூகங்களும் சிந்திக்க வேண்டும்.

இது சமூகத்திடம் வேண்டுமென்றே மோதல்களை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டு வெற்றியை தக்கவைத்து கொள்ள இரு சமூகத்தை பூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

கல்முனை மாநகர சபையாக ஆக்கப்பட்ட காலத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகின்றது கல்முனை மாநகர சபை முதல்வர் றக்கீப் அவர்கள் அந்த மாநகர சபையில் பலகாலம் உறுப்பினராக இருந்திருக்கின்றார் அவ்வாறு இருந்தும் அவர் தற்போது கூறுவது அந்த எல்லை வகுக்கப்படவில்லை என்பது கேவலமான வார்த்தையாகும்.

இவர்கள்தான் கல்முனையை (30) வருடமாக ஆட்சி செய்து வருகிறார்கள் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக இருந்திருக்கிறார்கள் இந்த விடயத்தை தீர்க்கவில்லை என்றால் கட்சிக்கு மாத்திரமல்ல சமூகத்திற்கும் கேவலமாகும்.

கல்முனை எல்லைப் பிரச்சினை விடயத்தில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் மூட்டிவிட்டு அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் இதனை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.

Previous Post

இணுவில்,ஏழாலை கொரோனா சந்தேகநபர்கள் ;மாதிரிகள் கொழும்புக்கு

Next Post

தேர்தல் திகதி குறித்து முக்கிய கலந்துரையாடல் இன்று!

Next Post

தேர்தல் திகதி குறித்து முக்கிய கலந்துரையாடல் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures