கனடா பிரதமரின் வீட்டை புதுப்பிக்க ரூ.563 கோடி செலவாகுமா?: வெளியான பரபரப்பு தகவல்

கனடா பிரதமரின் வீட்டை புதுப்பிக்க ரூ.563 கோடி செலவாகுமா?: வெளியான பரபரப்பு தகவல்

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ரூடோ தங்கவுள்ள அரசு வீட்டை புதுப்பிக்க சுமார் 563 கோடி செலவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடா நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தல் லிபரல் கட்சி தலைவரான ஜஸ்டின் ரூடோ அபாரமாக வெற்றி பெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால், பிரதமர்கள் தங்கும் அரசு இல்லமான Sussex Drive பகுதியில் வசிக்க அவர் மறுத்துவிட்டார்.

ஏனெனில், இந்த அரசு வீடானது கடந்த 1868-ல் கட்டப்பட்டதால் அதை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரை செய்ததால் அதனை பிரதமர் ஏற்றுள்ளார்.

கடந்த 1868-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீட்டை 1943-ம் ஆண்டு அரசு பறிமுதல் செய்தது. பின்னர், 7 ஆண்டுகளுக்கு பின்னர் 1953ம் ஆண்டு முதல் இவ்வீட்டில் கனடா நாட்டு பிரதமர்கள் தங்கி வருகின்றனர்.

எனினும், இவ்வீடு தற்போது தங்குவதற்கு பாதுகாப்பாக இல்லாத காரணத்தினால் அதனை புணரமைக்க அரசு முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து புதிய மின்சார இணைப்புகள் கொண்டு வருவது, தற்போதுள்ள நீச்சல் குளத்தை அகற்றி விட்டு புதிதாக நீச்சல் குளம் கட்டுவது, தற்போதுள்ள வீட்டிற்கு அருகில் மற்றொரு புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பல பணிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இப்பணி அனைத்தையும் முடிக்க சுமார் 38 மில்லியன் டொலர்(563,10,30,000 இலங்கை ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News