சூப்பர் ஸ்டாருடன் கீர்த்தி சுரேஷ்! அனிருத் சிபாரிசு
கீர்த்தி சுரேஷ் இன்றைய ட்ரெண்டுக்கு டாப் நடிகை என்றே சொல்லலாம். சிவகார்த்திகேயனுடன் ரெமோ ஹிட்டானதை இவர் இளையதளபதி விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
தற்போது சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பைரவா படத்திற்கு டப்பிங் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்தது.
அடுத்து கீர்த்தி சுரேஷ் பவனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று செய்திகள் வந்தது. இந்த படத்திற்காக அனிருத் தான் கீர்த்தி நடிப்பதற்கு சிபாரிசு செய்தாராம்.