Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளைஞர்களின் எதிர்ப்புக்குள்ளும் முல்லைத்தீவில் சடலங்கள் எரிப்பு

May 3, 2020
in News, Politics, World
0

இளைஞர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், கேப்பாப்பிலவு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நீதிவானின் அனுமதியுடன் களிக்காட்டில் எரியூட்டப்பட்டன.

கொழும்பைச் சேர்ந்த  80 வயதுடைய வேலு சின்னத்தம்பி, 81 வயதுடைய பி.ஜி.மார்டீன் ஆகிய இருவருமே கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

இவர்களின் மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை  என்று  மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சடலங்களை மாவடிப்பிலவு இந்து மயானத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு வைத்தியசாலை வளாகத்திலிருந்து ஒருவரது சடலம் தகனம் செய்வதற்கான வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில், வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்றுகூடிய பிரதேச இளைஞர்கள் சடலத்தை மாவடிப்பிலவு இந்து மயானத்தில் தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவி வரும் சூழலில், எந்தவொரு பாதுகாப்பும் இன்றி சடலத்தைத் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலேயே அவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அதேவேளை, வவுனியாவிலுள்ள மின் தகனம் செய்யும் மயானத்தில் சடலங்களைத் தகனம் செய்யுமாறு, பிரதேச இளைஞர்களால் கோரிக்கை விடப்பட்டது.

அதனையடுத்து வவுனியாவில் சடலங்களை மின் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்குள்ள மின்தகனம் செய்யும் இயந்திரம் பழுதடைந்துள்ளது என்று வவுனியாவிலிருந்து உரியவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

முள்ளியவளை பொலிஸார் இது தொடர்பான நிலைப்பாட்டை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதியின் கவனத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் முள்ளியவளைப் பகுதியில் உள்ள  பொதுக் காடு ஒன்றில் சடலங்களை எரியூட்ட தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  களிக்காடு என்ற காட்டுப்பகுதியில் இருவரின் சடலங்களையும் தகனம் செய்வதற்குப் பதில் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு படையினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி,  கிராம சேவையாளர், பிரதேச சபை உறுப்பினர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குமாரபுரம் இளைஞர்கள், ஊடகவியாளர்கள் முன்னிலையில் இருவரின் சடலங்களும் தகனம் செய்யப்பட்டன.

Previous Post

29 வைத்தியசாலைகளில் 176 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில்

Next Post

மஹிந்தவின் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது!

Next Post

மஹிந்தவின் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures