Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான் | உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி

January 24, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான் | உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி

அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில். சென்னையைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, குறைவான கால அவகாசத்தில் ஓடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து, அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.

இன்றைய சூழலில் உலகளவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, அவை உலக சாதனைக்கான புத்தகத்தில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்கேட்டிங் எனப்படும் காலில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு சாலை மார்க்கமாக சறுக்கிச் செல்லும் விளையாட்டில், தனி நபர் சாதனையை சென்னை மாணவி ஒருவர் நிகழ்த்தியிருக்கிறார்.

சென்னையில் தனியார் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, தனிநபர் அதிவிரைவு ஸ்கேட்டிங் விளையாட்டில், அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அவர் 44 கி.மீ தூரத்தை 1 மணி நேரம் 44 நிமிடங்களுக்குள் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.

இந்த சாதனை நிகழ்வு சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர் அருகே உள்ள வயலூர் சாலையில் நேற்று அதிகாலை 4 30 மணியளவில் நடைபெற்றது. வழக்கத்தை விட பனி பெய்து, காலநிலை பெரிதும் சவாலாக இருந்த நிலையிலும், மாணவி ரஃபியா விடா முயற்சி செய்து இத்தகைய கடினமான சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ததை நிபுணர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக மாணவி ரஃபியா பேசுகையில்,“மெரினா கடற்கரைக்கு சென்ற போது சிறுவர்கள் ஸ்கேட்டிங் செய்ததை பார்த்து எமக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது. பிறகு எம்முடைய விருப்பத்தை கேட்டந்த பெற்றோர்கள், எம்மை ஸ்கேட்டிங் வகுப்புக்கு அனுப்பினார்கள்.

அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் பயிற்சியாளர் டோனா சதிஷ் ராஜா அளித் பிரத்யேக பயிற்சி ஆகியவற்றால் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதிலும் உலக சாதனை செய்ய வேண்டும் என்பது கனவாக இருந்தது.

என் கனவை நனவாக்க எம்முடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர் எமக்கு உறுதுணையாக இருந்தனர். இப்போது உலக சாதனை நிகழ்த்தியிருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல சாதனைகளை நிகழ்த்துவதே என் எதிர்காலம் லட்சியம்.” என்றார்.

Previous Post

நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக தொடர்ந்தும் இருப்பேன் பதவியின் இறுதி நாளில் ஜெசிந்தா ஆர்டென் உருக்க உரை

Next Post

சவூதியில் ரொனால்டோ விளையாடிய முதலாவது உத்தியோகபூர்வ போட்டியில் அல் நாசர் வெற்றி

Next Post
சவூதியில் ரொனால்டோ விளையாடிய முதலாவது உத்தியோகபூர்வ போட்டியில் அல் நாசர் வெற்றி

சவூதியில் ரொனால்டோ விளையாடிய முதலாவது உத்தியோகபூர்வ போட்டியில் அல் நாசர் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures