ரொறொன்ரோ கிழக்கில் 10-வயது சிறுவன் சுடப்பட்டான்.

ரொறொன்ரோ கிழக்கில் 10-வயது சிறுவன் சுடப்பட்டான்.

கனடா-10வயது சிறுவன் ஒருவன் நகரின் கிழக்கு பகுதி பிளேக்- ஜோன்ஸ் சுற்றுபகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அவசர மருத்துவ சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஜோன்ஸ் அவெனியு மற்றும் ஜெராட் வீதியில் இரவு 11.40மணியளவில் நடந்துள்ளது. சிறுவனின் தோளில் சூடு பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.சிறுவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சந்தேக நபர் குறித்த தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை. பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வு பிரிவினர் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் நகரில் இடம்பெற்ற மூன்றாவது சூட்டு சம்பவம் இதுவாகும்.
இரவு 6.30மணியளவில் வெஸ்ரன் வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டிடமொன்றில் மனிதனொருவர் சுடப்பட்டுள்ளார்.தொடர்மாடிக்கட்டிடத்தின் வாகன தரிப்பிடத்தில் சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக எற்றோபிக்கோவில் பயங்கரமான துப்பாக்கி பிரயோகம் நடந்துள்ளது.இதனால் ஒருவர் கடுமையான நிலைமைக்கு ஆளானார்.
புளோர் வீதி மற்றும் ஓக்லன்ட் வீதியில் அமைந்துள்ள துரித உணவகத்தின் அண்மையில் வாகனத்தில் அமர்ந்திருக்கையில் சுடப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் அவ்விடத்தை விட்டு ஓட முயன்றுள்ளார் ஆனால் அவரது வாகன சக்கரத்தின் பின்னால் உயிராபத்தான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து இரண்டாவது மனிதரொருவரும் பாதிக்கப்பட்ட நிலைமையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

shotshot1shot2

– See more at: http://www.canadamirror.com/canada/63725.html#sthash.8OFHqB5u.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News