மூன்று கொலைகளை செய்த ‘Heart of a King’ எனப்படும் தெருக்கும்பல் முற்றாக அழிக்கப்பட்டது.
கனடா-ரொறொன்ரோ பொலிசார் குற்றச்செயல்கள் புரிந்தமை அல்லது தெருக்கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்பட்ட 50-ற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.டவுன்ரவுன் ரொறொன்ரோவில் இடம்பெற்ற குறைந்தது 3 கொலைகளிற்கு பின்னால் இவர்கள் இருந்துள்ளனர் எனவும் நம்பபடுகின்றது.
திட்டத்தின் உச்சக்கட்டமாக இடம்பெற்ற தேடுதல் வேட்டை ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் மொன்றியல் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடாத்தப்பட்டது. 32-பேர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 53பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என Police Chief Mark Saunders தெரிவித்துள்ளார். பெரும்பாலான கைத்துப்பாக்கிகள் உட்பட்ட 17துப்பாக்கிகள்,45,000டொலர்கள் பணம் Mercedes G-Wagon உட்பட ஆடம்பர வாகனங்கள் நான்கு, 110,000டொலர்கள் பெறுமதியான பென்ட்லி சங்கிலி, குண்டு துளைக்காத மார்பணி போன்றன பறிமுதல் செய்யப்பட்டன.
அத்துடன் எண்ணிக்கையற்ற அளவு மரியுவானா, கொக்கெயின் மற்றும் கெற்றமைன் போன்றவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Heart of a King கும்பல் கலிவக்சில் தெரியப்படும் ;“North Preston’s Finest எனப்படும் கும்பலை அடிப்படையாக கொண்டது.கைதான கும்பலில் உள்ளவர்களின் குடும்பங்கள் கலிவக்சில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கும்பலின் தலைவனான றிச்சட்சன் a.k.a. “Bam” அல்லது “Bambino,” பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளை பென்ட்லேயின் மேல் அமர்ந்திருக்கின்றார்.
கைதானவர்கள் மீது 285குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.