போர்க்களத்தில் ஒரு பூ’ இயக்குனர் கு.கணேசனின் படத்திற்கு கர்நாடக மாநில அரசின் விருது!
தமிழீழ அரசியல் பிரிவு போராளியும் ஊடகவியலாளருமாகிய இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கியவர் கு.கணேசன். இசைப்பிரியாவின் வாழ்க்கையை போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் இவர் இயக்கிய கன்னட படமான ‘சவி நிலையா‘ என்ற கன்னட படமே விருதிற்கு தேர்வாகியுள்ளது. இந்தப்படத்தில் நடித்துள்ள பேபி மேவிஷி சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘சவி நிலையா’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினைப் பெறவுள்ள பேபி மேவிஷிக்கு இயக்குநர் கு.கணேசன் மற்றும் நளினி கணேசன் உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.