சுரங்க ரயில் பாதை அடிமட்டத்தில் தீ. ரயில் சேவைகள் தாமதம்.
கனடா- யங் நிலையத்தில் தரமிழந்த கேபிள் எரிந்ததால் பரபரப்பான காலை நேர சுரங்க ரயில் சேவைகள் சென்ட் ஜோர்ஜ் நிலையத்திற்கும் பேப் நிலையத்திற்கும் இடையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
அதிகாலை 6-மணியளவில் யங் நிலையத்தின் ராக் மட்டத்தில் தீ ஏற்பட்டதாக தீயணைப்பு சேவையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் வாடிக்கையாளர்களை பெரிதளவில் பாதித்தது.கிட்டத்தட்ட 90-சிற்றிடை போக்குவரத்து பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
TTC ஊழியர்கள் இருவர் சிறிய புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.