பார்வதி என்னை பாரடி – Tum Hi Ho பாடலின் மற்றொரு பரிமாணம்
இசைக்கு மொழிகள் கிடையாது என்றாலும் சில பாடல்கள் மட்டும் தான் அனைவரையும் கவரும்.
அப்படி ஒரு பாடல் தான் Aashiqui 2 படத்தில் Tum Hi Ho என்ற ஹிந்தி பாடல். 2013ல் வெளியான இப்பாடல் இன்றுவரை பலரின் ரிங்டோனாக விளங்குகிறது. இப்பாடலின் தமிழ் வெர்ஷனும் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது.
தற்போது இப்பாடலின் இன்னொரு வெர்ஷனாக அடி பார்வதி என்னை பாரடி என்ற தமிழ் கவர் பாடல் வெளியாகியுள்ளது.
கத்தி எடுத்து என் கைய அறுத்தேனடி என்று தொடங்கும் இப்பாடலில் விட்டுப்போன காதலியை நினைத்தும் உருகும் காதலனாக நடித்துள்ளார் மது.CPE. இவர் தான் இப்பாடலை எழுதி பாடியுள்ளார். ஒளிப்பதிவு, எடிட் செய்து இயக்கியுள்ளார் கனத்.
இப்பாடலுக்கு சினிஉலகம் ஊடக அனுசரணை வழங்கியுள்ளது. உங்களது படைப்புகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டுமானால் [email protected] என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.