கலிஃபோர்னிய துப்பாக்கிச் சூடு : இரு பொலிஸார் உயிரிழப்பு
தென் கலிஃபோனியாவின் பாம் ஸ்பிரிங் பாலைவன நகரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாம் ஸ்பிரிங் பகுதியில் தனது மகன் துப்பாக்கியுடன் இருப்பதாக பெண்ணொருவர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே, குறித்த பொலிஸ் அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விரைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.