Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி வட்டாரம் தகவல்

October 11, 2016
in News
0

முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி வட்டாரம் தகவல்

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருவதாகவும், இன்று அவர் ஒருசில வார்த்தை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ந் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது.

சிகிச்சைக்காக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கு இடையே, கடந்த மாதம் 30–ந் தேதி லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலேவும் சென்னை வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார்.

தொடர்ந்து, டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவும் அவருடன் வந்து இணைந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது.

டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பை நீக்கவும், சீரான சுவாசம் மேற்கொள்ளவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், நேற்று 18–வது நாளாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் உடல் நிலையை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர்.

அவரை தொடர்ந்து, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலேவும் நேற்று காலை புறப்பட்டு சென்றார்.

அவர் இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையை தொடருவார் என தெரிகிறது.

அதே நேரத்தில், டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்களில் ஒருவரான கில்நானி நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். அவர் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்.

இவ்வாறு சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் அரசியல் கட்சி தலைவர்களும், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இன்றும் பல அரசியல் தலைவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அப்பல்லோ ஆஸ்பத்திரி வந்தார். அங்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் குழுவிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைவார் என்றார்.

இது போல் கேரள முதலமைச்சர் பிரணாய் ராய் விஜயன், கவர்னர் சதாசிவம், ஆகியோர் இன்று சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்பல்லோ மருத்துவமனை வந்தனர். அங்கு முதலமைச்சர் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும். அவர் ஒரு சில வார்த்தைகள் பேசியதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: Featured
Previous Post

எங்கே என்னுடைய தந்தை! ரத்தம் சொட்ட சொட்ட கதறி அழும் சிறுமி

Next Post

கலிஃபோர்னிய துப்பாக்கிச் சூடு : இரு பொலிஸார் உயிரிழப்பு

Next Post
கலிஃபோர்னிய துப்பாக்கிச் சூடு : இரு பொலிஸார் உயிரிழப்பு

கலிஃபோர்னிய துப்பாக்கிச் சூடு : இரு பொலிஸார் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சுரேஷ் சலேவுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் – சுதேசிய ஜனபலய வலியுறுத்தல்

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

August 26, 2026
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

August 26, 2026
ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய ப்ரபாத் ஜயசூரியவுக்கு கண்டன எச்சரிக்கை

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய ப்ரபாத் ஜயசூரியவுக்கு கண்டன எச்சரிக்கை

August 25, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தேர்தல் வழக்கு : தமிழக முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

August 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures