கனடாவின் தலைநகரில் தோன்றய பாரிய புதைகுழி : மக்கள் வெளியேற்றம்,
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், புதன்கிழமை பாரிய புதைகுழி ஒன்று தோன்றியுள்ளது.குறித்த புதைகுழி, ஒட்டாவாவின் Rideau Street இல் உள்ள பாரிய பல்பொருள் அங்காடிக்கு அருகிலேயே தோன்றியுள்ளது. திடீரென தோன்றிய இந்த புதைகுழியால், குறித்த பாதை பெரிதும் மோசமடைந்ததுடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த வாயு குழாயிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வெடிப்பிலிருந்து வாயு வெளியேற ஆரம்பித்தமையின் பின்னர், பாதுகாப்பு நோக்கம் கருதி அப்பகுதியில் உள்ள மக்கள், வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த உள்ளூர் அதிகாரிகள், “புதைகுழி தோன்றிய போதிலும், பொதுமக்கள் எவரும் அதனால் பாதிக்கப்படாமல் தப்பியது எமது அதிஷ்டமே” என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த புதைகுழி தோன்ற காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், பொதுமக்களை மாற்று பாதைகளை உபயோகிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.