கனடியத் தமிழர் தேசிய அவையின் நிதிசேர் நடை பயணம்:”வேர்களுக்காக”.

கனடியத் தமிழர் தேசிய அவையின் நிதிசேர் நடை பயணம்:”வேர்களுக்காக”.

கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு, சிறியோர் – முதியோர் காப்பகங்களுக்கான உதவி, இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின் பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு பகுதி தமிழ் மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நம் உறவுகள் தமக்கான வாழ்வாதாரத் தேவைகளுக்காக புலம் பெயர்ந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்கும் முகமாக கனடியத் தழிழர் தேசிய அவை ஒரு நிதிசேர் நடை பயணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அவர்களுக்கான வாழ்வாதார அத்தியாவசிய உதவிக்கான உடனடி நிவாரணத்தைத் துரிதப்படுத்தும் நோக்குடன் யூன் மாதம் 25 ஆம் நாள் 2016 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு Markham Road & Steels Avenue சந்திப்பில் அமைந்துள்ள ஜோன் டானியல்ஸ் பூங்காவில் (John Daniels Park) நிதிசேர் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலத்தின் தேவையுணர்ந்து எம் உறவுகளின் துயர் துடைக்க ஒன்றிணைந்து பயணிப்போம். பொருளாதாரத்திலும், கல்வியிலும் பின்நகர்த்தப்பட்ட ஒரு இனமாக எம்மினம் மாற்றப்படுவதை மாற்றியமைத்து கனடிய ஈழத்தமிழ் மக்களாக வரலாறு படைப்போம் வாரீர்.
verkal

இடம் : John Daniels Park (Markham Rd & Steels Avenue)
காலம்: June மாதம் 25 ஆம் நாள் 2016 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: [email protected]

– See more at: http://www.canadamirror.com/canada/64057.html#sthash.rGQKigT9.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News