TTCயின் கட்டண அதிகரிப்பு அமுலில்.
கனடா- TTCயின் புதிய கட்டண அதிகரிப்பு ஞாயிற்றுகிழமை காலையில் இருந்து அமுலிற்கு வந்துள்ளது.
ஞாயிற்றுகிழமையில் இருந்து மெட்ரோபாஸ் ஒன்றின் விலை டொலர்கள்141.50லிருந்து டொலர்கள் 146.25ஆக அதிகரிக்கின்றது. பிரெஸ்ரோ மற்றும் ரோக்கன் விலை டொலர்கள் 2.90லிருந்து டொலர்கள் 3.00ஆக அதிகரிக்கின்றது.
மாணவர்கள் மற்றும் முதியவர்களின் ரோக்கன் பிரெஸ்ரோ மற்றும் பண கட்டணம் 10 சதங்கள் அதிகரிக்கின்றது. ரோக்கன் மற்றும் பிரெஸ்ரோ டொலர்கள் 2.05ஆக உயர்கின்றது.
வயதானவர்களின் பண கட்டணம் 2018வரை டொலர்கள் 3.25ஆகவே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.