Saturday, August 2, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல! இயக்குனர் ரஞ்சித்

June 19, 2021
in News, கட்டுரைகள்
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈழத்தின் நீர்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சித் ஜோசப் தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழக திரைப்படங்களில் பணி புரிந்த இவர் சமீபத்தில் இயக்கியுள்ள சினம்கொள் திரைப்படம் உலக தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பேமிலி மேன் 2 திரைப்படத்தை எதிர்த்து அமேசன் இணையத்தை விட்டு வெளியேறியதுடன் ஊடகங்கள் வாயிலாக அந்தப் படத்திற்கு எதிரான கருத்தையும் வெளியிட்டு வருகிறார். அவருடனான விசேட செவ்வி இதோ.

  1. பேமிலி மேன் படத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்?

தமிழ் இனத்தின் விடுதலைக்காக போரடிய எமது விடுதலை அமைப்பையும், தமிழர்களையும் தவறாக காட்சிபடுத்தியும், பிழையான வரலாற்றை உருவாக்க்கியும் family man 2 என்னும் தொடர் அமேசான் பிறைம்மில் வெளிவந்திருக்கின்றது. கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல. வரலாற்றை பிழையாக மாற்றுவதல்ல. இத்தொடர் அரசியல் வன்மத்தோடும் தமிழ்இனக்குரேதத்தோடும் உருவாகியுள்ளது, ஒட்டுமொத்த தமிழ் சமூகமே இதை எதிர்க்க வேண்டும்

  1. இதன் பின்னால் ஏதும் அரசியல் பின்னணி உண்டா?

இலப அரசியல் இல்லாமால் தமிழரின் பிரச்சனைகளை யாரும் அனுகுவதிமில்லை பேசுவதுமில்லை. 2009 பின் ஈழத்தமிழரையும், ஈழத்தமிழர் விடுதலைக்காய் போராடிய விடுதலைப் புலிகளையும் பிரித்து வைக்கும் அரசியல் தொடங்கிவிட்டது. அதற்க்கக எதிரிகள் முதலில் பயண்படுத்தியது ஈழத்தின் புலி எதிர்ப்பு படைப்பாளிகளைத்தான். எலும்புக்கு ஆசைப்பட்டு தன் இனத்துக்காக போராடிய மாவீரர்களை சமூக வலைத்தளங்களிலும், படைப்புகளிலும் பயங்கரவாதிகளாக, பாசிசவாதிகளாக முத்திரை குத்த முனைந்தார்கள். ஆனால் அவ்வகை ஈனஅரசியல் எடுபடாமால் போக, இன்றைய நவீன காலத்து OTT இயங்குதளங்களின் வழியாக உருவாக்கபடும் தொடர்களில் எமது ஈழ அரசியல் விடுதலை போராட்டம் பேசு பொருளாக மாறியிருக்கின்றது.

ஆனால் அறம்சார்ந்த விடுதலை போராட்டத்தை, போராளிகளை பயங்கரவாதிகளாக முத்திரைகுத்தும் ஈன அரசியல் இங்கும் தொடர்கின்றது. சமூக வலைத்தளங்களைவிட இவ்வகை தளங்கள் ஆபத்தாணவை காரணம் ஒரே நேரத்தில் பல கோடி மக்களை சென்றடையக்கூடியவை, அதிகமான இளம் தலைமுரையினரை வாடிக்கையாளர்களாக கொண்டவை. நேர்மையான, ஒழுக்க கட்டுப்பாடோடு இயங்கிய ஒரு இயக்கத்தை பிழையானவர்களாக, அரசியலுக்காய் கொலை செய்பவர்களாக, சித்திகரிக்கும் இத்தொடர்கள் அடுத்ததலைமுறைக்கு பிழையான கருத்தை கொண்டு சேர்க்கின்றது. எமது நீயாத்தை பேசும் படைப்புக்கள் கோப்புக்கள் அழிக்கப்பட்ட சூழலில் இத்தகைய படைப்புக்களை நம்பி அதையே உண்மை என போககூடிய சூழல் உருவாகும். இதைத்தான் எமக்கு எதிரானவர்கள் உருவாக்க நினைப்பது இதுதான் இதற்க்கு பின்னால் இருக்க கூடிய அரசியல்.

  1. எதிர்ப்பை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்?

பெரும் நிறுவனங்கள் வருவாய் இழப்பை மட்டுமே வைத்து பேரம் பேசக்கூடியவர்கள். இனக்கருத்துக்கோ நியாதர்மத்துக்கோ மதிப்பழிக்கமாட்டார்கள். அவர்கள் மொழி இலபம். அந்த இலபத்தை அசைத்து பார்ப்பதன் மூலமே நாம் வெற்றியடைய முடியும். ஈழம், தமிழகத்துக்கு வெளியே 10 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனார், இவர்களில் குறைந்தது 2 மில்லியன் மக்கள் அமேசான் பிறைம்மில் இருந்து வெளியேறினால்? Family man 2 போன்று இன்னும் எமக்கொதிரான குப்பை படைப்புகள் உருவாகமால் இருக்க இந்த வெளியேற்றத்தை ஒரு எச்சரிக்கையாகவும் இலபத்தை மட்டுமே பார்ப்பவர்களுக்கு பாடமாகவும் இது மாறும்.

  1. தமிழகத்தில் இந்த படத்துக்கான எதிர்ப்பு எப்படி இருக்கிறது?

மிகப்பெரிய அளவில் இல்லை என்றே சொல்லவேண்டும், கோரோனோ காரணமாக மக்கள் முடங்கிகிடப்பதும் முக்கியமான காரணம், ஆனாலும் எதிர்ப்பை நாம் உருவாக்க முனையவேண்டும், ஈழத்தமிழரையும் மட்டுமல்ல, ஓட்டுமொத்த தமிழ் இனத்தையே தவறானவர்களாக இத்தொடர் வெளிப்படுத்தி நிற்க்கின்றது. தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையில் இருக்கும் தொப்புள்கொடி உறவை அழிக்க காலகாலமாக உருவாக்கப்படும் அரசியல் இதில் இலைமறை காயகவும் சில இடங்களில் வெளிபடையாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பெண் போராளியை அவளது சூழலை பயன்ப்படுத்தி தங்களது காம இச்சைக்கு இணங்க வைக்க தமிழகத்து தமிழர்கள் முயல்வதாக வரும் காட்சியின் மூலம் பெண்கள் மதிக்கும் ஒரு இனத்தை, அதுவும் போராளிகளை மதிக்கும் தமிழக உறவுகளை அசிங்கப்படுத்தி அதன் மூலம் ஈழத்தமிழர்களை தமிழாகத்துக்கு எதிரானவர்களாக மாற்றும் சூழ்ச்சி அரசியல் இடம்பொற்றுருக்கின்றது. ஆகவே தமிழக ஆளுமைகள் அரசியல்வாதிகள், சமூக ஆர்வளர்கள் இனைந்து மூர்க்க்கமாக இத்தொடர் நிறுத்தப்பட போராடவேண்டும். இந்தியாவில் பெரும் சந்தைய விரித்துள்ள அமேசான் நிறுவனத்துக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும்.

  1. இந்திய தமிழக சினிமாவில் ஈழத் தமிழர்கள் பங்கு என்ன?

தாயரிப்பாளர்கள் என்கின்ற நிலையில் அன்மைகாலமாக நமது நிறுவனங்கள் இயங்க்கிகொண்டிருந்தாலும், அவர்களை இல்லாமால் செய்ய உள்குத்து வேலைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. கலைஞர்கள் பலர் செயற்ப்பட்டுக்கொண்டிருந்தாலும் வாய்ப்பு என்பது பெரிய அளவில் கிடைப்பதில்லை என்பதே உண்மை. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலை மாறியிருக்கின்றது அதற்க்கு காரணம் தமிழ் சினிமாவின் வியபாரம் புலம்பொயர் தமிழர்களில் தங்கியிருப்பதும் வெற்றி தேல்விக்கான இடத்தை நிர்னயிக்ககூடிய வருவாய் சூழல் அவர்கள் சார்ந்து இருப்பதும் காரணமாக இருக்கலாம்

  1. ஈழ இயக்குனர்களுக்கு இந்திய சினிமாவில் உள்ள வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?

பாலுமகேந்திர, இன்னும் ஒரு சிலரை தவிர தமிழாக சினிமாவில் வாய்ப்புக்கள் கிடைக்காதவர்களே அதிகம். இன்றைய சூழலில் பலர் துனை இயக்குனர்களாக இந்திய சினிமாவில் செயற்ப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள், இவர்கள் எல்லோருக்கும் நாளைக்கு இயக்குனராக வாய்ப்பு கிடைக்குமா என்றால் அதற்க்கு காலம்த்தான் பதில் சொல்ல வேண்டும். ஈழம்சார்ந்த தயாரிப்பாளர்கள் வாய்ப்புகொடுத்தால் நடக்கலாம் ஆனால் தமிழக தயாரிப்பு நிறுவணங்கள் வாய்ப்பு தருவார்களா என்றால் அதற்க்கும் விடைகிடையாது, பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கதை சொன்னவன் என்ற அடிப்படையில் இதை சொல்கின்றேன். கதை பிடித்துப்போனாலும் வேறு எதோ காரணங்களுக்காக விஜய் சேதுபதியுடன், விசாலுடன் எனது தமிழக சினிமா முயற்ச்சிகள் இடையிலே நின்றுபோனது. ஆகவே நாம் சினிமாவை கற்றுக்கொண்டு எமது ஈழ சினிமாவில் செயற்பட முயலவேண்டும் 25 – 30 வீதமான வியாபாரம் எம்மிடம் இருக்கும்போது, சிறப்பான ஈழத்திரைப்படங்களும் வெற்றியடையும்.

  1. பேமிலி மேன் போன்ற சதிகளை முறியடிக்கும் படைப்புகளுக்கான வாய்ப்பு உள்ளதா?

“படைப்பை படைப்பால் மட்டுமே அடிக்க முடியும்” அதற்க்கான பயணம் தொடங்கிவிட்டது. தனிமனிதனக தொடங்கிய போராட்டம் முப்படைகளும் கொண்ட பலம்மிக்க இராணுவாமாக மாற்றிகாட்டியவர் எமது தேசியத்தலைவர். அவர் வார்த்தையிலிருந்தே , அவர் பயணத்திலிருந்தே ஈழத்தமிழராகிய நாம் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும் அனுதபத்தை தேடவோ, இரந்து போய் மண்டியிடவோ அவர்கள் எமக்காய் போராடவில்லை. நாம் வல்லமை மிக்கவர்களாக போராட கத்துகொடுத்திருக்கின்றார்கள் விரைவில் சதிகளை முறியடிப்போம் அதற்க்கு நமது தாயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும். கதைகள் எம்மிடம் கொட்டிக்கிடக்கின்றது கலைஞர்கள் இருக்கின்றார்கள் இது சாதியமாகும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சாம்பிராணி போடுவதால் கிடைக்கும் பலன்கள்!

Next Post

முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தேரர் அடித்துக் கொலை

Next Post
முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தேரர் அடித்துக் கொலை

முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தேரர் அடித்துக் கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

August 2, 2025
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

August 2, 2025
சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு | மனித உரிமைகளுக்கான மையம் நேரில் ஆய்வு

திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம்

August 2, 2025
யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் 

யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் 

August 2, 2025

Recent News

அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

August 2, 2025
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

August 2, 2025
சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு | மனித உரிமைகளுக்கான மையம் நேரில் ஆய்வு

திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம்

August 2, 2025
யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் 

யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் 

August 2, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures