Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக்கூடிய மனநிலையில் நாட்டு மக்கள் இல்லை!!

May 4, 2020
in News, Politics, World
0

பாராளுமன்ற தேர்தலை எதிர் கொள்ளக் கூடிய மனநிலையில் இன்று நாட்டு மக்களில்லை என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் 2020 தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலயே ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.

பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு 2020.03.19 ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்டது முதல். எதிர்வரும் 2020.06.20 ஆம் திகதிக்குள் அல்லது மூன்று மாத காலப் பகுதிக்குள் அல்லது குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் தேர்தல் நடாத்தப்படாத பட்சத்தில், சில வேளை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடி அற்றதாகி, புதிய வேட்புமனுக்கள் கோரப் படலாம்.

ஆனால் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் தேர்தலினை நடாத்த முடியாத சூழ்நிலை காணப்படுவது தெளிவு எனின் கலைத்த பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் ஏற்படும், இதற்கு மேலாக பாராளுமன்றத்தை மீண்டும் ஜனாதிபதியாலும் கூட்ட முடியும். எனவே இவைகள் இக்காலப் பகுதியில் காணப்படும் அரசியல், சட்ட சிக்கல்களாக காணப்படும். இந்நிலைப்பாடு ஒரு சாராருக்கு சாதகமாகவும், இன்னொரு சாராருக்கு பாதகமாகவும் அமையலாம்.

ஆனால் தேர்தல் ஆணையாளர் இருக்கும் சட்டத்தினை அமுலுக்கு கொண்டு வருவதோடு, நடக்கும் தேர்தலுடன் தொடர்புடைய தபால், போக்கு வரத்து, அச்சகம் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளையும் கவனத்தில் கொள்வார்.

இச் சூழ்நிலையானது சில கட்சிகளுக்கு சாதகமாகவும், சில கட்சிகளுக்கு பாதகமாகவும் அமைய வாய்ப்புள்ளது. மேலும் இத் தேர்தலினை நடத்துவதற்கான திகதி 2020.06.20 என மேலோட்டமாக பேசப்பட்டாலும், அதற்கான சாத்தியப்பாட்டினை நாட்டில் காணப்படும் கொரோனா நோய்த்தாக்கத்தின் தன்மையே தீர்மானிக்கும்.

இம்மாதம் 27 ம் திகதியில் இருந்து 30 ம் திகதிக்குள் தேர்தல் ஆணையத்தால் கலந்தாலோசித்து மே மாதம் முதலாவது வாரத்தில் கூட்டப்பட இருக்கும் சகல கட்சிகளுக்கான கூட்டத்தில் இத்தேர்தல் தொடர்பான தீர்மானத்தினை அறிவிப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு அதன் உயர்பீட உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தேர்தலினை நடாத்துவது தொடர்பான விடயங்களை அல்லது காலத்தினை நிர்ணயிக்கும் வகையில் எமது கட்சியின் தீர்மானத்தினை தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க கட்சியின் செயலாளர் நாயகம் எம்.டி.ஹசனலி நடவடிக்கை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

தற்போது நாட்டில் காணப்படுகின்ற கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் தேர்தலினை நடாத்தி கட்சிகளின் செல்வாக்கினையும், அதிகாரத்தினையும் காண்பிக்க முயல்வோமாயின், அதற்கு முன் கொரோனா நோயின் தாக்கமானது நாட்டை தாக்கி ஆட்சி செய்து காண்பித்து விடும்.

தேர்தல் சட்டங்களும், அதற்கான செயற்பாடுகளும் மக்களுக்காகவே தவிர, இவற்றுக்காக மக்களல்ல என்பதனை சகலரும் உணர்ந்து செயற்பட வேண்டிய ஒரு காலப் பகுதியில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

எனவே நாட்டு மக்கள் பூரணமாக கொரோனா நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபட்டதன் பிற்பாடு தேர்தலுக்குள் செல்வதனையே ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் விரும்புகிறது என்பதுடன் இவ்விடயத்தில் மக்களை நோக்கிய பார்வையில் மிகவும் தெளிவாகவும், உண்மையாகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கையில் கொரோன 718

Next Post

மே மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல்

Next Post

மே மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures