சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்போருக்கு முகக்கவசங்களை வழங்குவது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு பரிசீலிக்கவுள்ளது.
கொரோனா ரைவஸ் தொடர்பில் மேலதிமாக எவராவது பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகுமாக இருந்தால் முகக்கவசங்களை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சின் மேலதிக செயலாளர் கேஜி தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.
கழிவறைகளில் நீர் வழங்கல் அமைப்பு சபையினால் நீர்வழங்கப்படும்போது கைகளை கழுவும் திரவம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை சுதந்திர தின நிகழ்வின்போது ஆயிரம் வரையிலான பொதுமக்கள் 2500 விருந்தினர்கள், 4325 இராணுவத்தினர், 868 கடற்படையினர், 815 விமானப்படையினர், 515 சிவில் பாதுகாப்பு படையினர் உட்பட்டவர்கள் பங்கேற்பர் என்றும் தர்மதிலக்க குறிப்பிட்டுள்ளார்.