Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடளாவிய ரீதியில் சக்கர நாற்காலி பயணம்

February 1, 2020
in News, Politics, World
0

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,  சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கம் ஏற்படுத்தவும் நாடளாவிய ரீதியில் சக்கர நாற்காலி பயணத்தை கடந்த வருடம் பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பித்து முடித்திருந்தார் .

அதேபோன்று இவ்வருடமும் இன்றையதினம் (01.02.2020 சனிக்கிழமை ) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலி அவர்களுடன் இணைந்து ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிறேமசந்ர  ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் பூத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும், மும்மதங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும் இன்று காலை 08.30 மணி அளவில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து சர்க்கர நாற்காலி பயணத்தை ஆரம்பித்துள்ளனர் .இலங்கை முழுவதற்குமான சுற்றுப்பயணமாக இது உள்ளது .

இன்றய தினமே இவர்கள் வவுனியாவை சென்றடைந்து விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது  .

இந்த பயணத்துக்கான  அனுசரணையினை தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு( DATA  ) கடந்தவருடமும் இந்த வருடமும்  வழங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர் .

மாற்றுத்திறனாளிகளான நாம் சமூக நல்லிணக்கம் வேண்டியும் எம்மைப்போன்ற நாடுமுழுவதிலுமுள்ள மாற்றுத்திறனுடையோரின் சிறப்பான எதிர்கால வாழ்வு கருதியும் சக்கரநாற்காலியில் இலங்கையைச்சுற்றி வலம் வருகிறோம். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் பின்வரும் கோரிக்கைகளை நாம் இந்த சமூகத்திற்கு முன் வைக்கிறோம்.

1. இன ரீதியான நல்லிணக்கத்தை இந்த நாட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

2. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஏனையோர் அனுபவிக்கும் சகல உரிமைகள் சலுகைகளையும் அனுபவிக்க வழிசமைக்க வேண்டும்.

3. நாட்டிலுள்ள சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு 5000 ரூபாவை வழங்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

4. மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக சமய கலாச்சார விளையாட்டு கல்வி பொருளாதார விடயங்களில் சமவாய்ப்பு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்.

5. அனைவருக்கும் அணுகு வசதிகளை பொது நிறுவனங்கள்; அரங்கு மேடைகள் ; பொது மலசலகூடங்கள்; பொதுப்போக்குவரத்துகள்; பொதுக்கட்டிடங்கள் ; அலுவலகங்கள் வைத்தியசாலைகள்; சேவை மையங்கள் ; போக்குவரத்து தரிப்பிடங்கள் என சகல துறைகளிலும் அணுகுவசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

6.வங்கிகள் வைத்தியசாலைகள் போன்ற சேவை பெறும் மையங்களில் எமக்கு முன்னுரிமை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த எமது உரிமைகள் சலுகைகள் என்பவற்றைப்பெற்றுத்தரும் நல்ல நோக்கம் கொண்ட எமது நாட்டு அதி உத்தம ஜனாதிபதியாகிய தாங்கள் பல வகைககளில் எமக்கு பக்கப்பலமாக உறுதுணையாக இருக்கிறீர்கள். உங்கள் சிந்தனையில் இவற்றையும் கருத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டுமென அந்த மரதனோடத்தில் பங்குபற்றும் மூவராலும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ள  மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

போதைப் பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளுக்கு தொடர்பு

Next Post

சீனாவில் தற்போதைய சூழல் கவலைக்கிடமாக உள்ளது

Next Post
சீனாவில் தற்போதைய சூழல் கவலைக்கிடமாக உள்ளது

சீனாவில் தற்போதைய சூழல் கவலைக்கிடமாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures