ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவின் இரண்டாம் இலக்க பொறுப்பதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.ஜானக மாரசிங்கவையும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் இன்று (சனிக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் அந்த பகுதிக்கு சென்றிருந்தபோது, உத்தியோகபூர்வமாக அந்த விசாரணையை ஏற்காமல் அதன் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளதாக ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழு ஷானி அபேசேகர மீது மற்றுமொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.