பொதுஜன ஐக்கிய முன்னணியின் இணைத் தலைவர்களாக இருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதன்போதே குறித்த விடயம் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.