கரைச்சி பிரதேச சபையினரால் அறவிடப்படுகின்ற ஆதன வரிக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள வர்த்தகரான கு.மகேந்திரன் என்பவரை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மருத்துவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
கரைச்சி பிரதேச சபையால் எந்தவொரு உள்ளுராட்சி சபையாலும் அறவிடப்படாத அளவுக்கு அதிகரித்த வீதமான பத்து வீத வரி அறவிடப்படுகிறது. இதனை நான்கு வீதமாக குறைக்குமாறு தெரிவித்தே கடந்த வியாழன் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குறித்த வர்த்தகர் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் குறித்த வர்த்தகரை அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்வையிட்டும் வருகின்றனர்.
இதேவேளை தனது போராட்டம் தனி நபர் பேராட்டமாக இருந்தாலும் முழு மக்களுக்கான நன்மைக்குரியதே என்றும், அதிகரித்த ஆதனவரிக்கு தொடர்பில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பொது மக்கள் ஆதன வரியை செலுத்துவதனை தவிர்க்குமாறு குறித்த வர்த்தகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஏழு நாட்களுக்குள் பொருத்தமானதும், ஏற்புடையதுமான தீர்வினை வழங்குவதாக எழுத்து மூலமான உறுதிப்பாட்டை கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் சி. சிவபாலன் வழங்கியதனை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.













