Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கான காரணம் !

October 30, 2019
in News, Politics, World
0

நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சீராக்குவதற்கு லிட்ரோ காஸ் லங்கா வினைத்திறனுடன் செயலாற்றிவருவதாகவும்,  அவசியமான  எரிவாயு சிலின்டர்களை சந்தையில் தடங்கலின்றி விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இதனைக் கூறியுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் சவூதி அரேபியாவின் அரெம்கோ ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சந்தையில் எரிவாயுவுக்கு குறிப்பிடத்தக்களவு தட்டுப்பாடு நிலவுகின்றது.  தற்போதைய எரிவாயு பற்றாக்குறைக்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன.

எரிவாயு விலை தொடர்பில் சூத்திரம் தயாரிக்கப்பட்ட நிலையில்,விலை குறைவு ஒன்றை எதிர்பார்த்து,செப்டம்பர் மாதத்தில் எரிவாயு கேள்வியில் வீழ்ச்சி காணப்பட்டது.

அடுத்து, செப்டம்பர் மாத நடுப் பகுதியில் இடம்பெற்ற சவூதி அரேபியாவின் அரெம்கோ ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு சவூதி அரேபியாவின் பகுதிகளைச் சேர்ந்த எரிவாயு விநியோகத்தில் உலகளாவிய ரீதியில் இலங்கை அடங்கலாக தாமதம் ஏற்பட்டது.

மேலும், எரிவாயு சிலின்டரின் விலைக்குறைப்பு காரணமாக புதிதாக சந்தையில் பிரவேசித்த நுகர்வோரின் எண்ணிக்கையும் காரணமாக அமைந்தது.

கடந்த சில ஆண்டுகளில் பதிவாகியிருந்த மிகவும் குறைந்த விலையாக தற்போதைய விலை காணப்படுகின்றது. 2016 இல், 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 1,321 ரூபாயாக காணப்பட்டது. நாட்டின் எரிவாயு துறைக்கு தற்போதைய தட்டுப்பாட்டு நிலை வெவ்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டில் தொடர்ந்து நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கப்பல்கள் எரிவாயு விநியோக இறங்குதுறைகளை நெருங்குவதில் காணப்படும் சிக்கல் நிலையும், இந்த நிலைமையை மேலும் பாதித்துள்ளது. கப்பல்கள் காத்திருக்கும் நிலையில்,அவற்றை இறங்குதுறையில் இறக்குவதில் சிக்கல் நிலைகளும் காணப்படுகின்றன.

இந்த காரணங்களினாலேயே தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், பொது மக்கள் அச்சமடைந்து, கொள்வனவு செய்ய முனைவதும், 900 – 950 மெட்ரிக் தொன்களாக காணப்பட்ட பாவனை, 1300 மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளது. முழு விநியோகத் தொடரிலும் இது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் உடன் கைது

Next Post

5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர்

Next Post

5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures