நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.













