Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விதிகளை மீறுவோருக்கு தேர்தல் ஆணையகம் கடும் எச்சரிக்கை!

October 8, 2019
in News, Politics, World
0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளை விதிக்கப்பட்டுள்ள சட்ட வரையறைக்கு உட்பட்தாக முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர் தெரிவு செய்யப்படும் வரையில் ஒரு வேட்பாளர் இன்னுமொரு வேட்பாளருக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகள், பிரச்சார துண்டு பிரசுரங்கள், பெனர்கள் முதலானவற்றை காட்சிப் படுத்துதல் தொடர்பாக சட்ட விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கலின் பின்னராக ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “தேர்தல் தொடர்பான சட்ட விதிகளை நடைமுறைப்புடுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் ஒருவர் தனது பிரச்சார கூட்டத்தை நடத்தும் போது பிரச்சார கூட்ட தினத்தன்று அவரது பிரச்சார பதாதைகள், பெனர்கள் முதலானவற்றை குறிப்பிட்ட கூட்டம் நடைபெறும் இடத்தில் மாத்திரம் காட்சி படுத்தவேண்டும்.

குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த எல்லை பகுதிக்குட்பட்டதாக இது இடம்பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வேட்புமனு தினம் முதல் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் அதாவது (தேர்தல் முடிந்த 1 வார காலம் வரை) ஊர்வலம் நடத்தப்படுவது தடையாகும். இத்தகைய ஊர்வலங்களை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்வர். இவ்வாறு நடத்தப்படும் ஊர்வலங்களை காணொளி மூலம் பதிவு செய்து அதனை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்வர்.

வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக நன்கொடை வழங்குதல், தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்தல், வழிபாடுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மூலமாக இதற்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மற்றும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் போது பொலிஸாரின் அனுமதியுடனேயே பயன்படுத்த வேண்டும்.

அரசாங்க சொத்துக்களை தேர்தல் வேட்பளர்களின் பிரச்சாரங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தக்கூடாது, அரசாங்க ஊழியர்கள் அலுவலக நேரங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது” எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள ஒழுக்கக் கோவையின்படி செயற்பட்டு தேர்தல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

வரலாற்றில் முதற்தடவையாக 7500 பேர்!!

Next Post

மலையகத்திற்கான புகையிரத சேவைகளும் ஆரம்பம்

Next Post

மலையகத்திற்கான புகையிரத சேவைகளும் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures