அரியாலை அருளம்பலம் வீதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட துப்பரவு நடவடிக்கையின் போதே இன்று காலை இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது கிரனைட் மற்றும் இரண்டு மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறித்த பகுதியில் மேலும் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக துப்பரவு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இதுதொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

