தாய்லாந்தில் ஆற்றில் மூழ்கியவரை யானைக்குட்டி ஒன்று ஓடிச் சென்று காப்பாற்றும் வீடியோ 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வைரலாகி வருகிறது.
காம் லா என்ற இடத்தில் உள்ள யானைகள் உயிரியல் பூங்காவில் கடந்த 2016ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்படும் ஒருவரைக் கண்ட குட்டி யானை ஒன்று விரைந்து சென்று தண்ணீருக்குள் இறங்கி அந்த நபரை துதிக்கையால் பிடித்துக் கொண்டு தனது கால்களுக்கு நடுவே நிறுத்தி வைத்துக் கொள்கிறது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ஏற்கனவே இதனை 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு கமெண்ட் செய்துள்ளனர். தற்போது மீண்டும் வெளியாகி உள்ள இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டும், பகிர்ந்தும், கருத்துக்ளை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

