நேபாளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையேற்றம் மற்றும் மலை நடைப் பயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாடு அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மலையேற்றம் மற்றும் சாகசப் பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் மற்ற பகுதிகளை விட மலைப்பகுதியில் மழையின் அளவு அதிமாகப் பெய்வதால் ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் எவரெஸ்ட் உள்ளிட்ட 17 வெவ்வேறு மலைச்சிகரகங்களில் ஏறுவதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 395 பேர் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளனர்.
அவர்களை குறிப்பிட்ட பகுதிகளில் இறக்கிவிடச் சென்ற ஹெலிகாப்டர்கள் மழை காரணமாக வேறு வேறு இடங்களில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.











