அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று பட்டம் பெற்ற 4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், பயிலுனர் அலுவலர்களாகவே இவர்கள் அரச துறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அரசாங்கத்தில் சுமார் 20,000 பட்டதாரிகளுக்கு அரச பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

