ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய தகுதியான ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆதரவு உறுப்பினர்கள் இருவர் வீதம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருவர் சார்பிலும், இருவர் வீதம் இக்குழுவில் உறுப்பினர்கள் அமையப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிரதமர் ரணில் தரப்பு சார்பில் அமைச்சர் ராஜித சேனரத்னவும், பிரதமரின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் வீரக்கொடியும், அமைச்சர் சஜித் சார்பில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் அமைச்சர் கபீர் ஹசீமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களது அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

