முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் அல்லது 10 ஆம் திகதியில் கோப் குழுவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும், இருப்பினும் அதில் ஆஜராகாததன் காரணமாக வேறு தினம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோப் குழுவில் நேற்றைய தினம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் ஹிரா பவுன்டேசன் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

