ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாவனையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் வழியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல்கள், அதிகளவில் மீனவர்களூடாகவே முன்னெடுக்கப்படுகின்றமை கண்டறிப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மாலைதீவு கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட இலங்கைக்கு சொந்தமான நான்கு படகுகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
அவற்றில் ஒரு படகிலிருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

