உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு இரண்டு வாரங்களில் 100 மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக குடியிருப்பாளர் தினம் ஒக்டோபர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

