Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சித் தலைமை மீது எனக்கு நம்பிக்கையுள்ளது- சஜித் பிரேமதாச

September 18, 2019
in News, Politics, World
0

கட்சி மீதும், தலைமைத்துவத்தின் மீதும் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் மீதும் எனக்கு நம்பிக்கையுள்ளது. எமது கட்சியில் சர்வாதிகாரத்துக்கு இடம் கிடையாது. படுக்கையறைகளுக்குள்ளிருந்து கொண்டு வேட்பாளரை தெரிவு செய்யும் கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு தரப்பினதும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு ஆதரவு தேடும் எண்ணத்தில் செயற்படப் போவதில்லை.  கருத்து முரண்பாடுகளை ஜனநாயக ரீதியில் பேசித் தீர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை மதிக்கின்ற கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவும், செயற்குழுவும் காலம் தாழ்த்தாமல் ஜனநாயக வழியில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் கட்சித் தலைவரிடம் இது குறித்து எழுத்து மூலம் கேட்டுள்ளேன்.

கட்சிக் கட்டுக்கோப்பை மீறி ஒருபோதும் செயற்படப் போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டுமென்று மக்கள் விடுத்த வேண்டுகோளுகிணங் கவே போட்டியிடத் தீர்மானித்தேன்.

கட்சியில் வேறு யாரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவர்களுக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. செயற்குழுவும், பாராளுமன்றக்குழுவும் கூடி ஜனநாயக ரீதியில் கட்சி யாப்புக்கமைய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் அவசியம் கருதி வாக்கெடுப்பை நடத்தி வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியும். எத்தகைய முடிவுவந்தாலும் நான் கட்சியை விட்டுப் போகப்போவதில்லை. கட்சியை உடைத்து சின்னா பின்னப்படுத்துவது எனது விருப்பமல்ல.

ஜனாதிபதி தேர்தவுக்கான அறிவிப்பு அடுத்துவரும் சில தினங்களுக்குள் வெளிவரலாம். எனவே வேட்பாளர் தெரிவை மேலும் தாமப்படுத்தாமல் கூடிய விரைவில் வேட்பாளரை தெரிவு செய்து அறிவிக்குமாறு, கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரியுள்ளேன். அவர் மீது எனக்குப் பூரண நம்பிக்கை இருப்பதால்தான் நம்பிக்கையோடு இக்கடிதத்தை எழுதினேன்.

எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கவே விரும்கின்றேன். இத்தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு நாமனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவிதமான நெருக்கடிகளும் கிடையாது.

சிலர் சிறிய கருத்து முரண்பாட்டை பூதாகரமாக்கிக் காட்ட முனைகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஏதோ இலாபம் தேட முனைவதாகவே தெரிகிறது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய விசேட ஊடகவியலாளர்  சந்திப்பின் போதே அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Previous Post

பலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு

Next Post

என்னிடம் இரு நிலைப்பாடுகள் இல்லை- சஜித் பிரேமதாச

Next Post

என்னிடம் இரு நிலைப்பாடுகள் இல்லை- சஜித் பிரேமதாச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures